ஜெ.- மத்திய அரசு மோதலால் தத்தளிக்கும் கருப்புப் பூனைப்படை
சென்னை:
தேசிய பாதுகாப்புப் படையின் (கருப்புப் பூனைப்படை) இயக்குனராக இருந்த நிகில்குமார் பதவிக்காலம் கடந்தசெவ்வாய்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் பதவி விலகிச் சென்றுவிட்டார்.
இதனால், கருப்பூனைப் படை தலைவர் இல்லாமல் இயங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழக அரசும் மத்திய அரசும் முழு மூச்சாக அதிகார மோதலில் இறங்கிவிட்டன.
இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டிருக்கிறது.
கருணாநிதி ஆட்சியில் தமிழக காவல்துறை டி.ஜி.பியாக இருந்த ராஜகோபாலனை பதவிக்கு வந்த கையோடு தூக்கிஎறிந்தார் ஜெயலலிதா. அவரை போலீஸ் பயிற்சிக் கல்லூரிக்கு தலைவாக்கினார். பழிவாங்குவதற்காகவேஉருவாக்கப்பட்ட பதவி போன்றது இது. இந்தப் பதவியில் தான் தேவாரத்தை முன்பு தூக்கி எறிந்தார் கருணாநிதி.
இந் நிலையில் கருணாநிதிக்கு தமிழகத்தில் பாதுகாபில்லை என்று கூறி கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பை மத்தியஅரசு வழங்கிது.
அதன்பிறகு, காவல்துறைப் பயிற்சிக் கல்லூரி இயக்குநராகப் பணியாற்றி வரும் ராஜகோபாலனை கருப்புப்பூனைப்படைக்கு இயக்குநராக மத்திய அரசு நியமித்தது.
எனவே, ராஜகோபாலனை உடனடியாக தமிழக அரசுப் பணியிலிருந்தது விடுவித்து மத்திய அரசுப்பணிக்குஅனுப்பி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் தான் திமுகவின் நெருக்குதல் காரணமாக, கருணாநிதி கைது விவகாரத்தில் தொடர்புடைய சென்னைநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் மற்றும ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன் ஆகிய 3 உயர் போலீஸ்அதிகாரிகளையும் மத்திய அரசுப்பணிக்கு அனுப்ப வேண்டும் என்று வாஜ்பாய் அரசு ஜெயலலிதாவுக்குஉத்தரவிட்டது.
இந்த 3 போலீஸ் அதிகாரிகளையும் மத்திய அரசு அழைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றுஜெயலலிதா கூறி வருகிறார்.
இந்த 3 அதிகாரிகளையும் மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப முடியாது என்றும் ஜெயலலிதா கூறி வருகிறார்.அவர்களோடு சேர்த்து ராஜகோபாலனையும் மாநில அரசுப் பணியிலிருந்து விடுவிக்காமல் இருந்து வருகிறார்ஜெயலலிதா.
கருணாநிதி விவகாரத்தில் ராஜகோபாலனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அவர் கருணாநிதிக்கு மிகவும்வேண்டியவர் என்பதால், அவரை மத்திய அரசின் உயர் பதவிக்கு அனுப்பாமல் மாநில போலீஸ் கல்லூரி தலைவர்பதவியிலேயே வைத்திருக்க ஜெயலலிதா முயல்வதாகக் கூறப்படுகிறது.
கருணாநிதி கைது விவகாரத்தில் தொடர்புடைய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் மத்திய அரசு பழிவாங்குவதாகக்கருதும் ஜெயலலிதா, கருணாநிதிக்கு வேண்டியவரான ராஜகோபலனை விடுவிக்காமல் வைத்திருப்பதன் மூலம்மத்திய அரசையும் திமுகவையும் வெறுப்படைய வைத்திருக்கிறார்.
முத்துக்கருப்பன் உள்ளிட்ட 3 அதிகாரிகள் விவகாரத்தை தனியாகவும் ராஜகோபாலன் விவகாரத்தை தனியாகவும்மத்திய அரசு பிரித்துப் பார்த்தாலும், இந்த இரு விவகாரங்களையும் ஒன்றாக்கி மத்திய அரசை குழப்பி வருகிறதுதமிழக அரசு.
இந்த அரசியல் மோதலால் நாட்டின் முக்கிய வி.வி.ஐ.பிக்களைப் பாதுகாக்கும் படைப்பிரிவு தலைமையில்லாமல்தத்தளித்துக் கொண்டிருகிறது.
இதற்கிடையில் கருப்புப்பூனைப் படையை நிர்வகிக்கும் பொறுப்பையும் சேர்த்து கவனிக்குமாறு எல்லைப்பாதுகாப்புப் படையின் இயக்குனரான குருபஜன் ஜகத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ராஜகோபாலன் மாநில அரசுப் பதவியிலிருந்து விடுவிக்கப்படும் வரை குருபஜன் தான் இந்தப் படையைநிர்வகிப்பார். இது குறித்து இந்தப் படையின் முன்னாள் இயக்குநர் நிகில்குமார் கூறுகையில், "இவ்வாறு தகுந்ததலைமை இல்லாமல் இருப்பது படையின் செயல்பாடுகளை நிச்சயம் பாதிக்கும்" என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications