தே.ஜ. கூட்டத்தில் பா.ம.க.: உச்சகட்ட வெறுப்பில் தி.மு.க.
டெல்லி:
இன்று (புதன்கிழமை) பிரதமர் வாஜ்பாய் இல்லத்தில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள்கட்சியும் கலந்து கொண்டது.
இதில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுக சார்பில் முரசொலி மாறன், மதிமுக சார்பில்வைகோ, எம்.ஜிஆர். அதிமுக சார்பில் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமியும் இக் கூட்டத்தில்கலந்து கொண்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க. இன்னும் சேர்க்கப்படவில்லை என தமிழக பாரதீய ஜனதா தலைவர்கள்முதல் கருணாநிதி வரை எல்லோரும் சொல்லி வரும் நிலையில் இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கலந்துகொண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக திமுகவின் விருப்பத்தை மீறியே பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளஅழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குறை கூறாமல் இருக்கவும் ஒற்றுமையாக இருக்கவும் சிலநெறிமுறைகள் வகுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள 4 பேர் கொண்ட குழுவில் திமுகவின் முரசொலி மாறனும் ஒரு உறுப்பினராகநியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் வாஜ்பாயின் ஆலோசனை இல்லாமல் அவர்சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பா.ம.கவுக்கும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் பிரதமர் மற்றும் அத்வானிஆகியோர் தான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
கருணாநிதியைப் புறக்கணித்துவிட்டு பிரதமரை நேராகப் போய் பார்த்து தே.ஜ. கூட்டணியில் சேர்ந்தது பா.ம.க.இதனால் கடுப்பானது திமுக.
அண்ணா அறிவாலயத்தில் (திமுக தலைமையகம்) வந்து என்னை ராமதாஸ் பார்க்கட்டும், அதன் பிறகு அவரைதே.ஜ. கூட்டணியில் சேர்ப்பது குறித்து யோசிப்போம் என கருணாநிதி நேற்று (செவ்வாய்க்கிழமை) தான் கூறினார்.
ஆனால், இன்று பா.ம.கவை கூட்டத்துக்கு அழைத்து திமுகவுக்கு மறைமுகமாக ஒரு தகவலைச் சொல்லிவிட்டார்வாஜ்பாய். கூட்டணியில் திமுகவைவிடவும் பெரியவன் நான் தான் என்பது தான் அது.
ஏற்கனவே, கருணாநிதி கைது விவகாரத்தில் தமிழக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வரும் திமுக இப்போது மேலும் எரிச்சலடைந்துள்ளது. தமிழகத்தில் தே.ஜ. கூட்டணிக்கு தலைவராக உள்ளதன்னை புறக்கணிக்கும் ராமதாசுடன் வாஜ்பாய் நெருங்குவதை திமுக விரும்பவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications