வாயில் புகுந்த எலி!
கோவை:
வாயைப் பிளந்துகொண்டு தூங்கிக் கொண்டிருந்த வாலிபரின் வாயில் எலி புகுந்து கடித்துக் குதறியது.
வீடுகளில் பழைய பேப்பர்களை எடைக்கு வாங்கி விற்று வருபவர் முத்து (வயது 35). பழைய பேப்பர்கள் குவிந்துகிடக்கும் கிடங்கில் தான் இவர் வழக்கமாக உறங்குவார்.
சில தினங்களுக்கு முன் வழக்கம்போல் எலிகள் நிறைந்த பழைய பேப்பர் கிடங்கில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். வாயை திறந்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவரது வாயில் ஒரு எலி புகுந்தது. இதை அவர் உணரவில்லை. சிறிது நேரம்வாய்க்குள் விளையாடிய எலி பின்னர் தொண்டைக் குழிக்குள் நுழைய முயன்றது.
உள்ளே நுழைய முடியாததால், அவரது தொண்டயைக் கடித்தது.
அலறிக் கொண்டு எழுந்த முத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். எலியை வெளியில் எடுக்கமுடியாததால், கடித்துக் கொண்டிருக்கும் எலியை விழுங்கிவிட்டார்.
ஆனால், தொண்டைக்குள் போன எலி அவரது சுவாசப் பாதையில் நுழைந்துவிட்டது. அங்கிருந்து உள்ளேயும்போக முடியாமல் வெளியிலும் வர முடியாமல் எலியும் தவித்தது.
உயிருடன் ஒரு எலி சுவாசப் பாதையை அடைத்துக் கொண்டு கடித்துக் கொண்டிருந்ததால் முத்து மூச்சுவிடமுடியாமலும் வலியினாலும் துடித்தார். வாயிலிருந்து ரத்தம் ஒழுகியது.
இதையடுத்து அவரை கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினர்.
மருத்துவர்கள் உடனடியாக செயல்பட்டு எலியை வெளியே எடுத்தனர். அதற்குள் அந்த எலி செத்துப்போயிருந்தது.
இதையடுத்து முத்து அங்கேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு விஷ முறிவு மருந்துகள்கொடுக்கப்பட்டன. வாயின் உள்ளே எலி கடித்ததால் ஏற்பட்ட புண்களுக்கும் மருந்துகள் தரப்பட்டன.
ஓரளவு உடல் நிலை தேறிய முத்து நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications