மீண்டும் 4 நாள் ஜாமீன் கேட்கிறார் சுதாகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் அஸ்தியை கரைப்பது தொடர்பான சடங்குகளில் கலந்து கொள்ள தனக்கு 4நாள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன்சுதாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கொலை மிரட்டல் வழக்கு, போதைப் பொருள் வைத்திருந்த வழக்கு ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுளார் சுதாகரன்.

இவர் நடிகர் சிவாஜிகணேசனின் பேத்தி சத்தியலட்சுமியின் கணவர். கடந்த மாதம் 21ம் தேதி சிவாஜிகணேசம்மரணமடைந்தார். சிவாஜியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு3 நாள் இடைக்கால ஜாமீன் அவருக்கு அளிக்கப்பட்டது. அதன் பின் அவர் மீண்டும் சியிைல் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் அஸ்தியை மாநிலத்தின் பல பகுதிகளிலும் கரைப்பது தொடர்பானசடங்குகளில் கலந்து கொள்ள, தனக்கு 4 நாள் இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டும் என்று சுதாகரன் சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+