மீண்டும் வந்தார் சுவாமி...
சென்னை:
கொஞ்ச காலம் காணாமல் போயிருந்த கலக்கல் சுப்பிரமணய சுவாமி திரும்பவந்துள்ளார்.
முக்கிய எதிர்க் கட்சியான திமுகவைவிட சுவாமியின் வழக்குகள் தான் ஜெயலலிதாவைஅரசியல்ரீதியில் மிகவும் புரட்டி எடுத்தன. பின்னர் ஜெயலலிதாவிடமே சரண்டராகிவழக்கமான அரசியல்வாதி தான் என்பதை நிரூபித்த சுவாமி, விரைவிலேயே தனதுஜெயலலலிதா எதிர்ப்பை மீண்டும் துவக்கினார்.
ஆனால், மீண்டும் ஜெயலலிதா முதல்வரானதையடுத்து அரசியல் வானில் சுவாமிகாணாமல் போயிருந்தார்.
மீண்டும் வந்தார்...:
ஆனால், மீண்டும் வந்திருக்கிறார் சுவாமி. வழக்கம்போல அதிரடியாகத்தான்.
டான்சி நில பேரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக அரசுபோட்ட வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றுகோரி சுப்ரமணியம் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்துள்ளார்.
அவர் தன் மனுவில் கூறியிருப்பதாவது:
முன்பு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை. ஜெயலலிதாதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, உண்மையான மதிப்பை விடக் குறைவானவிலைக்கு வாங்கினார். இதன் மூலமாக அரசுக்கு ரூ. 3 கோடி இழப்பு ஏற்படுத்திஉள்ளார்.
இந்த ஊழலை கண்டுபிடித்து, இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக ஊழல்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர கடந்த 95ம் ஆண்டு மார்ச் மாதம்அப்போதைய ஆளுனரிடம் அனுமதி பெற்றேன்.
அதன்பின் தி.மு.க, ஆட்சிக்கு வந்தது. அவர்களும் எந்தவிதமான நடவடிக்கையும்எடுக்காத காரணத்தால் நான் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 1996ம் ஆண்டுஜுலை மாதம் டான்சி நில பேரத்தை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தேன்.
அதன் பின் தி.மு.க. அரசு தனியாக மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவின்அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது தனிநீதிமன்ற நீதிபதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு 3ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுத் தாக்கல்செய்துள்ளார். இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும்முதல்வராகி உள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரே தன் கையில் அதிகாரத்தை வைத்துக் கொள்ளும் நிலைவந்துள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் ஆஜரான வக்கீல்களும்,வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா இந்த வழக்கில் அதிகாரிகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோதலையிடக் கூடும்.
இந்த அப்பீல் வழக்குகள் முறையாக நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாகமுதலில் புகார் கொடுத்த நான், ஜெயலலிதாவுக் எதிராக வழக்கு தொடர அனுமதிபெற்றேன். எனவே, ஜெயலலிதாவின் அப்பீல் வழக்கிலும் என்னை ஒரு வாதியாகசேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சுவாமி தனது மனுவில் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications