காவல்துறையை நவீனப்படுத்த ரூ. 210 கோடி கேட்கிறார் ஜெ.
சென்னை:
தமிழ்நாடு காவல்துறையை நவீனப்படுத்த ரூ.210 கோடி ஒதுக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர்ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநாட்டில் தொடக்க உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு காவல்துறையை நவீனப்படுத்த பல புதியதிட்டங்களை அதிமுக அரசு மேற்கொள்ளும் என்று கூறினார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது,
தமிழ்நாடு காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்திற்காகும் செலவில் பாதியை தமிழகம் ஏற்றுக் கொள்ளும்.பாதி செலவை ஏற்றுக் கொள்ள மத்திய அரசிடம் கேட்கப்பட்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசிடம் ரூ. 210 கோடிநிதியுதவி கேட்கப்பட்டிருக்கிறது.
உலகத்தில் தலைசிறந்த போலீஸ் துறையுடன் ஒப்பிடும் அளவுக்கு தமிழகப் போலீஸ் துறையை நவீனப்படுத்தி,மிகச் சிறந்த படையாக அதை மாற்றுவதே எங்கள் நோக்கமாகும்.
மேலும் போலீசாருக்கு நவீன யுக்திகளைப் பற்றி பயிற்சியளித்தல், மோப்ப நாய்ப்படை, கணினிமயமாக்கல்,இன்டர்நெட் குற்றம் பற்றி பயிற்சியளித்தல், குற்றப் புலனாய்வுத்துறையை மேம்படுத்துதல், கருப்புப்பூனைப்படைப் பயிற்சி மற்றும் அத்தியாவசிய கருவிகளை வழங்குதல் போன்ற திட்டங்களை அதிமுக அரசுமேற்கொண்டு வருகிறது.
சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் பல மறுமலர்ச்சித் திட்டங்கள் புகுத்தப்படும். இதற்கான முறையானஅறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியிடப்படும்.
குறைந்து வரும் போலீசாரின் எண்ணிக்கையை குறிப்பாக பெண் போலீசாரின் எண்ணிக்கையை அதகிரிக்கவும்தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா மாநாட்டில் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications