அதிமுக எம்.பிக்கள் போராட்டத்தால் நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது
டெல்லி:
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக- திமுக மோதல் மிகத் தீவிரம் அடைந்துள்ளது.
இன்றும் (வியாழக்கிழமை) லோக்சபாவில் திமுக, அதிமுக தொடர்ந்தது.
கருணாநிதி கைது விவகாரத்தில் தொடர்புடைய 3 போலீஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு வாஜ்பாய்அழைத்துள்ளதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் பிரச்சனையைக் கிளப்பினர்.
அதிமுக எம்.பியான பி.எச். பாண்டியன் தான் இந்தப் பிரச்சனையைக் கிளப்பினார். அவர் கூறுகையில், அரசியல்பழிவாங்குவதற்காகக் தான் சென்னை போலீஸ் கமிஷ்னர் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசுஅழைத்துள்ளது. திமுக பிரஷர் காரணமாகத் தான் மத்திய அரசு இப்படி நடந்து கொள்கிறது. இதை அதிமுககடுமையாக எதிர்க்கிறது என்றார்.
இதற்கு திமுக எம்.பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தவறு செய்ததால் தான் அந்த அதிகாரிகள் மீது மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கிறது என்றனர். அவர்களுக்கு அதிமுக எம்.பிக்கள் எழுந்து பதில் சொல்ல ஆரம்பிக்க இருதரப்பினரும் கடுமையாக அர்ச்சனை செய்து கொண்டனர். இதனால் அவையில் அமளிதுமளி ஏற்பட்டது.
இரு தரப்பினரையும் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் பலமுறை கேட்டுக் கொண்டார். ஆனால், அவர்கள்தொடர்ந்து மோதிக் கொண்டனர்.
இதையடுத்து முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இதில் தலையிட்டுப் பேசினார், எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மீதும்நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், அதற்கு மாநில அரசின் முன் அனுமதியை மத்தியஅரசு பெற வேண்டும்.
ஆனால், திடீரென 3 தமிழக அதிகாரிகளை மாநில அரசிடம் கேட்காமலேயே மத்திய அரசுப் பணிக்கு வாஜ்பாய்அரசு அழைத்துள்ள மரபுகளுக்கு முரணானது. கடந்த 50 ஆண்டுகளில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லைஎன்றார்.
சந்திரசேகரின் கருத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜெயபால் ரெட்டியும் பேசினார்.
அவர்களுக்கு திமுக எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, அதை எதிர்த்து அதிமுக எம்.பிக்கள் சத்தம்போட அவையில்பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
அதிமுக உறுப்பினர்கள் ஏற்படுத்திய பிரச்சனையால் நாடாளுமன்றம் சிறிது நேரம் ஸ்தம்பித்தது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications