கருணாநிதியிடம் நலம் விசாரித்தார் இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கைவலி மற்றும் தோள்வலி சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்தி.மு.க. தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேம்பால ஊழல் வழக்கு தொடர்பாக கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அவருக்கு வலது கையில் காயம்ஏற்பட்டது. சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் அவர் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைபெற்றார்.

இந்நிலையில், கருணாநிதி மீண்டும் புதன்கிழமை காலை அப்போலோ மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். வலதுதோள்பட்டையில் ரத்தம் கட்டி இருப்பதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தோள்பட்டையில் வியாழக்கிழமை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன்வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிட நேரம் நீடித்தது.

கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டித்தவர் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது அதிமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே "லடாய்" ஏற்பட்டிருப்பது அதை விட குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+