பரிதி கைது சம்பவம்: நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் முத்துக்கருப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பரிதி இளம்வழுதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவில் தவறானதகவல்கள் கொடுத்தது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மே மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது, எழும்பூர் தொகுதியில் நடந்தவன்முறைச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தி.மு.கவைச் சேர்ந்த எம்,எல்.ஏ.பரிதி இளம்வழுதி மீது வழக்குதொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மே மாதம் 17ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பரிதி இளம்வழுதி மனுத் தாக்கல்செய்தார். இந்த மனுவை விசாரித்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார், பரிதிக்கு மே மாதம் 23ம் தேதிஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஆனால், இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ், பரிதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செத்துஉத்தவரவிட்டார். இதை அடுத்து பரிதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் பரிதி. இந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம் பரிதிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஜாமீனில் வெளியான பரிதி இளம் வழுதி, சென்னை கமிஷனர் முத்துக்கருப்பன், வேப்பேரி இன்ஸ்பெக்டர்ராஜேந்திரகுமார் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.உயர்நீதிமன்றத்தில் தவறான தகவல்கள் கொடுத்து, தனது ஜாமீனை ரத்து செய்து உத்தரவு பெற்றுள்ளதாக பரிதிஇளம் வழுதி தனது மனுவில் கூறியிருந்தார்.

இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உ.யர்நீதிமன்றம், சென்னை மாநகர கமிஷனர் முத்துக்கருப்பனைநீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் ஆஜரான முத்துக்கருப்பன் தான் பதில் மனுத் தாக்கல்செய்ய கால அவகாசம் கோரினார்.

கால அவகாசத்தைத் தொடர்ந்து, புதன்கிழமை முத்துக்கருப்பன். நீதிபதி ஜெயசிம்மபாபு, நாகப்பன் ஆகியோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், வேப்பேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரகுமார், பரிதி இளம்வழுத்திக்கு வழங்கப்பட்டஜாமீனை ரத்துசெய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் சாராம்சம் எனக்கு தெரியும் என்று இந்த நீதிமன்றம்கருதினால், நான் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்.

பரிதி இளம்வழுதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, எனக்குத்தெரிந்துதான் தாக்கல் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். இந்த வழக்கில் ஜாமீனை ரத்துசெய்ய மனுத்தாக்ல் செய்வது தொடர்பாக என்னை இன்ஸ்பெக்டர் கலந்து ஆலோசிக்கவில்லை. இன்ஸ்பெக்டர்தாக்கல் செய்த மனுவின் சாராம்சம் எனக்கு தெரியாது.

பரிதி இளம்வழுதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி என் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் மனுத் தாக்கல்செய்யவில்லை. பரிதி இளம்வழுதியை போலீஸ் காவலில் வைத்து, என் கவனத்திற்கு கொண்டு வந்த போது, நான்உடனடியாக முறையான மனுத் தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டேன்.

எனவே என் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை. என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம்விளைவிக்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று முத்துக்கருப்பன் கூறினார்.

வேப்பேரி இன்ஸ்பெக்டர் மனு:

வேப்பேரி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரகுமார் தன் பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

பரிதி இளம்வழுதியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்த போது, அரசு தரப்பு வக்கீல்கள்நியமனம் செய்யப்படவில்லை. எனவே, அப்போது அரசு தரப்பு வக்கீல் அலுவலகத்தில் இருந்த ராஜா, ரத்தினவேலுஆகியோர் அந்த மனுவை தாக்கல் செய்தனர்.

பரிதி இளம்வழுதி போலீஸ் காவலில் வைக்கப்படவில்லை. அரசு தரப்பு வக்கீலாக செயல்பட்ட ராஜா மற்றும்ரத்தினவேலு ஆகியோர் பரிதி இளம்வழுதியை போலீஸ் காவலில் வைத்திருக்கலாம் என்ற யூகத்தின்அடிப்படையில் மனுத் தாக்கல் செய்திருக்கக்கூடும்.

எனவே, வழக்கில் தகுதி அளவுக்கு போகாமல் நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நீதிபதி உத்தரவு:

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜெயசிம்மபாபு, நாகப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,போலீஸ் தரப்பில் மனுவை தயாரித்ததாக கூறப்பட்ட வக்கீல்கள் ராஜா மற்றும் ரத்தினவேலு ஆகிய இருவரும்தங்கள் தரப்பு பதிலை அளிக்கும்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

போலீஸ் துணை கமிஷனர் கிறிஸ்டோபர் நெல்சன் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம்உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த மனுவின் மீதான அடுத்தகட்ட விசாரணை 3 வாரங்களுக்குதள்ளிவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+