பூலன்தேவி கொலை: சிறையில் இருந்தது போலி ராணா!
டெல்லி:
பூலன்தேவி கொலை நடந்த அன்று ஷேர்சிங் ராணா சிறையில் இருக்கவில்லை என்றும் தனது பெயரில்இன்னொரு நபரை அவர் தான் சிறையில் இருக்கச் செய்தார் எனவும் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை வழக்கை திசை திருப்பவும் கொலைக் குற்றத்திலிருந்து தப்பவும் ராணா தான் ஏதாவது குழப்பம்செய்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிகிறது.
இது குறித்து நடந்த விசாரணையில், சம்பவம் நடந்த நாளன்று ராணாவின் மதுக்கடையில் வேலை பார்க்கும்சரவண் என்பவர் தான் ஹரித்வார் சிறையில் இருந்தார் என்று தெரியவந்துள்ளது.
இந்த சரவண் 26ம் தேதி (பூலன்தேவி கொலை செய்யப்பட்ட மறுநாள்) ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.ஆனால், உடனடியாக தலைமறைவாகிவிட்டார். பஞ்சாபைச் சேர்ந்த சரவணைப் பிடிக்க சிறப்புப் போலீஸ் படைகள்அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், சரவண் எப்படி ஷேர்சிங் ராணா என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது பெரியகேள்விக்குறியாக உள்ளது. மேலும் ஷேர்சிங் ராணா என்ற பெயரில் தான் அவருக்கு ஜாமீனும்வழங்கப்பட்டுள்ளது.
இதனால், இக் குழப்பத்தில் நீதித்துறை, சிறைத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்எனக் கருதப்படுகிறது. இந்த அதிகாரிகளுக்கு ராணா பணம் கொடுத்து போலியான ஆவணங்களைத் தயாரிக்கச்செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து சிறையில் இருந்த சரவணின் கைரேகையுடன் ராணாவின் கைரேயை ஒப்பிட்டுப் பார்க்க டெல்லிபோலீஸ் ஹரித்வார் விரைந்துள்ளது. இதன்மூலம் தான் சிறையில் இருந்தது ராணா இல்லை என்பது நிரூபணமாகும்.
ராணா தவிர கொலை நடந்த அன்று ரஜீந்தர் என்ற நபரும் சிறையில் இருந்ததாக சிறை ஆவணங்கள் கூறுகின்றன.ரஜீந்தர் தான் ராணாவுடன் சேர்ந்து பூலன்தேவியை சுட்டுக் கொன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எல்லா குழப்பங்களையும் பணத்தின் உதவியோடு அதிகாரிகளை விலைக்கு வாங்கி ராணா தான் செய்திருக்கவேண்டும் என்று டெல்லி போலீஸ் நம்புகிறது. இதன் மூலம் கொலை வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என்று ராணாதிட்டமிட்டிருந்தார் என்று போலீசார் கூறுகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications