மழை: மேட்டூரில் குறைவான தண்ணீர் திறப்பு
மேட்டூர்:
காவிரி டெல்டா பகுதியில் தொடர்ந்து கடும் மழை பெய்துவருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்குதிறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு புதன்கிழமை மாலை முதல் குறைக்கப்பட்டது.
காவிர் நீர் பிடிப்பு பகுதியிலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்குநீர் வரத்து அதிகரித்ததால், கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு உயர்ந்தது. இதையடுத்து, குறுவைசாகுபடிக்கு தொடர்ந்து நீர் திறந்து விடப்பட்டதாலும், அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை அளவுகுறைந்தததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66 அடியாக குறைந்தது.
இதனால் முறை வைத்து பாசனம் செய்யும் டெல்டா விவசாயிகளுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்துமேட்டூர் அணையில் இருந்து அதிகமாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசைகேட்டுக் கொண்டனர்.
இதை அடுத்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 20,000 கனஅடிவீதம் 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.பின்னர் அது 5,000 கன அடியாக குறைந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக காவிரி டெல்டா தஞ்சாவூர் பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால்அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும்,மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications