கன மழையால் "வீரப்பன் வேட்டை" பாதிப்பு
ஈரோடு:
காட்டில் கனத்த மழை பெய்து வருவதால் சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் வேட்டை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக நிலம் சகதியாகி விடுவதால் கால் வைத்தாலே வழுக்கி விடும். இதனால் போலீசார் முகாம்களில்முடங்கியுள்ளனர்.
மேலும் மழைக் காலங்களில் அட்டைப்பூச்சிகளின் தொல்லையும் அதிகமாகி விடும்.
இது தவிர கொசுக்கள் வேறு. இந்தக் கொசுக்கள் சாதாரணக் கொசுக்களை விட பெரியவை, விஷம் வாய்ந்தவை.இந்த ராட்சத கொசுக்களுக்குப் பயந்து காட்டு யானைகளே காட்டின் வெளிப் பகுதிகளில் தான் உலவுமாம்.நிலைமை இப்படி இருக்கும்போது, அதிரடிப்படையினர் எம்மாத்திரம்?
இந்தப் பகுதியைச் சார்ந்த ஆசனூர், திம்பம், தாளவாடி, கொள்ளேகால், கர்கேகண்டி, கடம்பூர், பர்கூர்,வரட்டுப்பள்ளம் அணை ஆகிய இடங்களில் உள்ள அடர்ந்த காடுகளில் தான் வீரப்பன் தனது கூட்டாளிகளுடன்இடம் மாறி இடம் மாறி தங்கி வருகிறான்.
வீரப்பனுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் மழை ஒரு வரப்பிரசாதம். இந்த நேரத்தைப் பயன்படுத்தி அவர்கள்பிரச்சனை இல்லாமல் பாதுகாப்பான குகைகயில் ஒதுங்கிக் கொள்வார்கள்.
இந்தப் பகுதியைச் சார்ந்த காடுகளில் பெய்யும் மழை போலீசாருக்கு சங்கடத்தையும் வீரப்பனுக்கு வசதியையும்கொடுத்துள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த மழை நீடிக்கும் என்று சொல்லப் படுகிறது. எனவே மழைநின்ற பிறகுதான் தேடும் படலம் விரைவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications