டான்சி வழக்கு: ஜெ. மனு மீது இன்று விசாரணை இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி நில பேர ஊழல் வழக்கில், ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணைஇன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவில்லை.

ஜெயலலிதா முதன் முதலாக முதல்வராக பதவி வகித்தபோது, டான்சி நிலத்தை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடகுறைந்த விலைக்கு வாங்கினார். இதனால் அரசுக்கு ரூ 3 கோடி இழப்பு ஏற்பட்டது என்று புகார் கூறி, ஜனதா கட்சிதலைவர் சுப்ரமணியம் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதா மீதும் அவரதுஅமைச்சரக சகாக்கள் மீதும் ஊழல் வழக்குகளைத் தொடர்ந்தது தி.மு.க. அரசு. அந்த வழக்குகளைவிசாரிப்பதற்காகவே தனி நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.

அந்த வழக்குகளில் ஒன்றான டான்சி நில பேர ஊழல் வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதித்தது தனி நீதிமன்றம். இதை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வரானார்.

ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், அவர் இந்த வழக்கில் தலையிட்டு வழக்கு விசாரணைக்கு ஊறுவிளைவிக்கக்கூடும் என்பதால், வழக்கு தொடுத்த தன்னையும் இந்த வழக்கில் ஒரு வாதியாகச் சேர்க்க வேண்டும்என்று 2 நாட்களுக்கு முன், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார் சுவாமி.

சுவாமியின் இந்த மனு மீதான விசாரணைதான் இன்று (வெள்ளிக்கிழமை) வந்தது. ஆனால், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீது நடைபெறுவதாக இருந்த விசாரணை நடைபெறவில்லை.

சுவாமியின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் சுப்ரமணியம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும்போது, சுவாமியின் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+