"ஜெ. பெற்ற பரிசுகளை மியூசியத்தில் வைக்க அவசியமில்லை
சென்னை:
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கிடைத்த பரிசுப் பொருட்களை மியூசியத்தில் வைக்க வேண்டும் என்றுமுன்னாள் சபாநாயகர் க. ராசாராம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
15-06.1984ம் ஆண்டு அரசு பிறப்பித்த உத்தரவின்படி ரூ 3,000க்கு மேற்பட்ட விலை மதிப்புள்ள பரிசுர்பொருட்களை அமைச்சராக இருப்பவர் பெற்றால் அதை சென்னை மியூசியத்தில் ஒப்படைக்க வேண்டும்.
1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை முதல்வராக ஜெயலலிதா பணியாற்றிய காலகட்டத்தில், பல்வேறுகட்டங்களில் விலை உயர்ந்த பொருட்களை அவர் பரிசாக பெற்றிருந்தார்.
மேலும், ஜெயலலிதா 1994ம் ஆண்டு காஞ்சிபுரத்திலும், வேலூரிலும், ஊட்டியிலும் நடந்த கூட்டங்களிலும்,தரமணியில் நடந்த திரைப்பட நகர் விழாவிலும் கலந்து கொண்ட போது அவருக்கு விலை உயர்ந்த பொருட்கள்பரிசாகக் கொடுக்கப்பட்டன.
அவற்றை ஜெயலலிதா மீயூசியத்தில் ஒப்படைக்கவில்லை. எனவே, அவர் பரிசாக பெற்ற பொருட்களைமியூசியத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தனது மனுவில் ராசாராம் கூறியிருந்தார்.
இந்த மனுவிற்கு 1995ம் ஆண்டு ஜெயலலிதா விரிவான பதில் மனு தாக்கல் செய்தார். "அ.தி.மு.கவின் அடிப்படைஉறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராஜாராம், வேண்டும் என்றே இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். நான்நன்னடத்தை எதையும் மீறவில்லை" என்று ஜெயலலிதா தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்,.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கே.ஜெயின் மற்றும் பி.தங்கவேல் ஆகியோர், இந்த வழக்கிற்கான தீர்ப்பைவியாழக்கிழமை வழங்கினர்.
அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எப்படிப்பட்ட பொருட்களை பரிசாக வாங்கினார் என்று மனுதாரர்குறிப்பிட்டு கூறவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு மனுதாரர் எந்த விதமான ஆதாரத்தையும் காட்டவில்லை.
தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் பொதுநலன் வழக்கைப் போடக்கூடாது. அரசியல் ஆதாயநோக்கத்தோடு தாக்கல் செய்த இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்கூறியிருந்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications