வேரோடு வேறு இடம் மாற்றப்பட்ட 40 வயது வேப்பமரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் 40 வயது கொண்ட பழமையான வேப்பமரம் ஒன்று, வேரோடு பிடுங்கப்பட்டு வேறு இடத்தில்மீண்டும் நடப்பட்டது.

பழமையான பெரிய மரங்கள் இடையூறாக இருந்தால் வெட்டப்படுவது நம் ஊரில் வழக்கம். (சிலர், இடையூறுவிளைவிப்பதற்காகவே மரத்தை வெட்டி நடு ரோட்டில் சாய்ப்பதும் உண்டு!)

இவ்வாறு மரங்களை கண்டந்துண்டமாக வெட்டி எறியும் இந்தக் காலத்தில் சென்னையில் ஒரு விநோதம்நடந்துள்ளது.

சென்னை சி.பி. ராமசாமி ஐயர் கண்காட்சி வளாகத்தில் ஒரு பெரிய வேப்பமரம் உள்ளது. இது 40 ஆண்டுகாலபழமை வாய்ந்தது.

அந்த மரம் இருந்த இடத்தில் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் நிர்வாகத்தினருக்கு மரத்தை வெட்ட மனம்வரவில்லை. இதனால் மரத்தை அப்படியே பெயர்த்தெடுத்து வேறு இடத்தில் வைக்க முடிவுசெய்யப்பட்டது.

அதற்கான நிபுணர்கள் உதவியுடன் ராட்சத கிரேன்கள் மூலம் மரம் பெயர்க்கப்பட்டு வேற இடத்தில் ஆவமான குழவெட்டப்பட்டு நடப்பட்டது. மரத்தின் வேர்ப்பகுதியில் வேர் துளிர்விடுவதற்கான இராசயனப் பொருட்கள்வைக்கப்பட்டு நல்ல உயிர் சத்து நிறைந்த மண் கொண்டு மரத்தின் வேர்கள் மூடப்பட்டன.

மரம் இடம் மாற்றப்பட்டபோது அதன் வேர் பகுதியில் நீரை ஊற்றியும் சாணம் வைத்து மூடியும் ஒரு குழந்தையைப்போல பத்திரமாக பாதுகாத்தது இந்தக் குழு.

ஹிட்லரின் தோல்விக்கு மரங்களின் சாபம் தான் காரணம் என்று ஒரு கூற்று உண்டு. இன வெறிக்காகமனிதர்களையும், தனது ஆயுதத் தயாரிப்புகளுக்காக (வெடிகுண்டுகள் தயாரிப்புக்கு உதவும் செல்லுலோசுக்காக)மரங்களையும் அவரது ராணுவம் அழித்தது.

மரங்களை வெட்டி அரசியல் நடத்தும் சில பேருக்கு மத்தியில், கட்டடம் கட்ட இடையூராக இருந்த ஒரு மரத்தைக்கூட வெட்டி விறகாக்காமல் இடம் மாற்றி வைத்து தங்கள் மனிதாபிமானத்தை காட்டியுள்ளனர் இந்த அமைப்பினர்.

இதேபோல பைன் மரம் ஒன்றும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+