இலங்கை போர் செய்திகள்: நிருபர்களுக்கு மீண்டும் தடை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் போர் நடக்கும் வட பகுதிகளில் பத்திரிகையாளர்கள் நுழைவதற்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நீண்ட காலமாக, ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் போர்புரிந்து வருகின்றனர். இந்தப் போர்செய்திகளை வெளியிட இலங்கை அரசு தடை விதித்திருந்தது. ராணுவம் வழங்கும் செய்திகளை மட்டுமேவெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் போர் முனையில் இருந்து நேரடியாக தொலைக் காட்சிகளில்செய்திகளை லைவ்-ரிலே செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் இந்தத் தடை விலக்கப்பட்டது.

இதையடுத்து போர்க் களத்தில் "புகுந்த" பத்திரிகையாளர்கள் அங்கு நடக்கும் உண்மையான செய்திகளைஉலகிற்குச் சொல்லி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 24ம் தேதி அதிகாலையில் கொழும்பு விமான நிலையத்திற்குள் நுழைந்தவிடுதலைப்புலிகள், அங்கிருந்த பயணிகள் விமானங்களையும், அருகிலிருந்த ராணுவ விமானத் தளத்தில் இருந்தபோர் விமானங்களையும் தகர்த்தெறிந்தனர்.

இந்தத் தாக்குதலால், சில மணி நேரங்களிலேயே இலங்கை அரசுக்கு சுமார் ரூ.3,500 கோடி அளவுக்கு நஷ்டம்ஏற்பட்டது.

இந்தத் தாக்குதல் பற்றிய செய்திகள், பத்திரிகையாளர்கள் மூலம் உடனுக்குடன் பறந்து கொண்டே இருந்தன. சிலடி.வி. நிறுவனங்கள் "லைவ்"வாகவே ஒளிபரப்பி வந்தன.

அரசுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் அனைத்தும் உடனுக்குடனே வெளியானதால் கலங்கிப் போன இலங்கை அரசு,வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில், இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளுக்குப் பத்திரிகையாளர்கள்செல்லக் கூடாது என்று மீண்டும் தடை விதித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+