போலீசார் மீது தாமரைக்கனி கிரிமினல் வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்:
போலீசார் தன்னைத் தாக்கியதாக தாமரைக்கனி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கிரிமினல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த தேர்தலில் இவருக்கு அதிமுகவில் சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் இவர் கட்சியிலிருந்து விலகிதனித்துப் போட்டியிட்டுத் தோற்றார். இவரது மகன்தான் அதிமுக சார்பில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர்.
இந்நிலையில், கடந்த மாதம் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக போலீசார் இவரையும் கைது செய்தனர். அப்போது தன்னைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்துள்ளார் தாமரைக்கனி.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் 30-ம் தேதி காலை 7 மணிக்கு இன்ஸ்பெக்டர் முருகேசன் , சப்-இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் ஆகிய 2போலீசார் என்னை கைது செய்ய வந்தனர்.
அப்போது, நான் மருந்து சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று கூறினேன். அதைக் கேட்காமல் உடனே வரும்படிஎன்னை அடித்துத் தள்ளினர். மேலும் என்னைச் சிறைக்குக் கூட்டிச் செல்லும் போது வேனிலும் தாக்கினர்.
இதனால் எனது வலது தொடையிலும், இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிறகு நான் மருத்துவமனையில்அனுமதிக்கப் பட்டேன். இப்போதும் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
ஆட்சியாளர்களைத் திருப்திப் படுத்த என்னை துன்புறுத்திய அந்த 2 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தாமரைக்கனி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications