மாஜி அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர். பன்னீர் செல்வம் ஆகியோர் மீது, ஊழல் தடுப்பு துறைநடவடிக்கை எடுக்க கோரும் மனு மீதான விசாரணையை, அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்து சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் உத்தரவிட்டார்.
இந்த மனு வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் முன்புவிசாரணைக்கு வந்தது.
அப்பாதுரை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏ. சிராஜுதீன் கூறும்போது:
வீராணம் ஏரியின் ஆழத்தை அதிகப்படுத்துவதற்காக முந்தைய தி.மு.க.அரசு முடிவு செய்து, அந்த ஏரியையும்இங்கிருந்து நீர் செல்லும் மற்ற ஏரிகளையும் தூர்வாரும் பணிகளை ஆரம்பித்தது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன்,எம்.ஆர். பன்னீர் செல்வம் மற்றும் 2 கான்டிராக்டர்களுடன் சம்பந்தப்பட்டு உள்ளனர். இந்த முறைகேடு மூலம்அரசுக்கு ரூ.6.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று அப்பாதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்த போது, முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார், இதுகுறித்து கடலூர் ஊழல் தடுப்புத் துறையிடம் புகார்கூறினார்.
ஆனாலும் கடலூர் மாவட்ட போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய தயங்குகின்றனர். இந்த வழக்கைத் துரிதப்படுத்தாவிட்டால் சாட்சிகள் அழிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார் வழக்கறிஞர் சிராஜுதீன்.
இந்த வழக்கில், அரசு சார்பில் இது குறித்து பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, இந்தவழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications