அதிமுக அரசை கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஊழல் வழக்குகளில் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்கள்,அந்த குற்றங்களில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படும் வரை அவர்கள் அரசுஊழியர்களாக தொடரக்கூடாது என்று உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின்அடிப்படையில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா முதல்வராக பதவிவகிப்பதை எதிர்த்தும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கே.டி.தாமஸ் மற்றும் வரைவா ஆகியோ அடங்கியடிவிஷன் பெஞ்ச் வியாழக்கிழமையன்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

அந்த உத்தரவில், ஊழல் வழக்கில் ஒருவர் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டதைஎதிர்த்து அப்பீல் செய்த பின், அந்த அப்பீல் விசாரணையின் போது அவரதுதண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டதன் காரணமாக அவர்குற்றவாளி அல்ல என்று தீர்மானிக்கப்படுவதும் நிறுத்தி வைப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.

குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு தண்டனை பெற்றவர், அப்பீல் மனுவில் நிரபராதிஎன்று முடிவு செய்யப்படும் வரை அவர் அரசு ஊழியராக தொடர அனுமதிக்கக்கூடாதுஎன்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் பி.ஆர். கபூர் என்பவர் ஒரு மனுவைதாக்கல் செய்துள்ளார்.

டான்சி நில பேர ஊழல் தொடரப்பட்ட 2 வழக்குகளில் ஜெயலலிதாவுக்கு முறையே 3மற்றும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அபராதமும் அளித்து சென்னை தனிநீதிமன்ற நீதிபதி அன்பழகன் உத்தரவிட்டு உள்ளார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார்.அந்த மனுக்கள்தற்போது நிலுவையில் உள்ளன.

ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனுக்கள் மீது, அவருக்கு வழங்கப்பட்டதண்டைனை மட்டும்தான் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அவரை குற்றவாளி என்றுநீதிமன்றம் தீர்மானித்தது நிறுத்தி வைக்கப்படவில்லை.

எனவே, அரசு ஊழியர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு,ஜெயலலிதாவும் ஒரு அரசு ஊழியர்தான் என்பதால் அவருக்கும் பொருந்தும். ஆகவே,ஜெயலலிதா முதல்வராக பதவியில் தொடர தடைவிதிக்க வேண்டும் என்று கபூர் தனதுமனுவில் கூறி உள்ளார்.

முன்னதாக சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல், எம்.எல்.ஏவாகதேர்ந்தெடுக்கப்படாமல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டதைஎதிர்த்தும் கபூர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட உயர் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

இந்ந நிலையில் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டிகபூர், ஜெயலலிதா முதல்வராக தொடர தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல்செய்துள்ள மனு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+