கருணாநிதி- இளங்கோவன் சந்திப்பு: புதிய உறவுக்கு காங். முயற்சியா?
சென்னை:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியை மனிதாபிமானத்தில் தான்சந்தித்தேன். இதில் அரசியல் ஏதும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
அவரை நேற்று இளங்கோவன் மருத்துவமனையில் சென்று சந்தித்தார். ஏற்கனவே, தனது கூட்டணியில்தலைவியான ஜெயலலிதாவுடன் தொடர்ந்து மோதி வரும் இளங்கோவன் திடீரென கருணாநிதியைச் சந்தித்ததுபல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
கருணாநிதி கைது விவகாரத்தில் ஜெயலலிதா அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது. இதனால், மத்திய பா.ஜ.க. அரசு மீது திமுக அதிருப்தியுடன் உள்ளது.
அதே போல சோனியா முதல் இளங்கோவன் வரை அனைவரையும் திட்டி வருகிறது அதிமுக. சரியான சந்தர்ப்பம்கிடைத்தால் இரு கட்சிகளுமே ஒன்றை ஒன்று வெட்டிவிடக் காத்திருக்கின்றன.
ராஜிவ் கொலைக்குப் பின் விடுதலைப் புலிகளுடனான உறவை திமுக ஒட்டு மொத்தமாக துண்டித்துவிட்டது.பா.ஜ.க. மீது கோபமாக இருக்கும் திமுகவை தன் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயல்வதாகத் தெரிகிறது. இதன் முதல்முயற்சியாகத் தான் இளங்கோவனை விட்டு கருணாநிதியின் உடல் நலம் விசாரித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.
உடனடியாக கூட்டணி ஏதும் சாத்தியமில்லை என்றாலும் ஜெயலலிதாவுக்கு ஒரு எச்சரிக்கை தரவும்கருணாநிதியுடன் புதிய உறவுக்கு அச்சாரமிடுகிறது காங்கிரஸ்.
ஆனால், கருணாநிதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த இளங்கோவன் கூறுகையில், நானும் ஒரு அரசியல் கட்சித்தலைவன். அவரும் ஒரு அரசியல் கட்சிதக் தலைவர். உடல் நலமின்றி அவதிப்படும் அவரை தனிப்பட்ட முறையில்தான் சந்தித்தேன். இதில் அரசியல் முக்கியத்துவம் ஏதுமில்லை என்றார்.
இதே போலத் தான் முன்பு கருணாநிதியை சிறையில் சந்தித்துவிட்டு வந்த ராமதாசும் கூறினார். ஆனால், அடுத்த சிலதினங்களிலேயே அதிமுக கூட்டணிக்கு முழுக்குப் போட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications