அடுத்தடுத்து 2 லாரிகளுடன் அரசு பஸ் மோதல்:10 பேர் பலி- 21 பேர் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை தெக்கலூர் அருகே அரசு பேருந்தும், லாரிகளும் அடுத்தடுத்து நேருக்கு நேர்மோதிக் கொண்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 31 பேர்படுகாயமடைந்தனர். இதில் 21 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு அந்த பஸ் சேலத்திலிருந்து கோவைக்கு சென்றுகொண்டிருந்தது. அவினாசியைத் தாண்டி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்தலாரியுடன் மோதியது. இதில் பேருந்தின் ஹெட்லைட் விளக்குகள் சேதமடைந்தன.

பஸ்சுக்கு லேசான சேதம் ஏற்பட்டது. இதில் பயணிகள் யாரும் காயமடையவில்லை.

ஆனால், அந்த பஸ்சின் அலட்சியமான டிரைவர் விளக்குகள் இல்லாமலேயே பஸ்சைஅங்கிருந்து கிளப்பினார். இரவு 12.30 அளவில் பேருந்து அவினாசியை தாண்டிசென்று கொண்டிருந்த போது தெக்கலூர் என்ற இடத்திற்கு வந்த போது எதிரேவேகமாக வந்து கொண்டிருந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

மிகுந்த வேகத்துடன் அந்த லாரி மோதியது. விளக்குகள் எரியாமல் இந்த பஸ் எதிரில்வந்ததால் லாரி டிரைவருக்கு பஸ் வருவதே தெரியவில்லை.

இந்த பயங்கர விபத்தில் பேருந்தின் டிரைவர் உள்ளிட்ட 10 பேர் அந்த இடத்திலேயேஉடல் நசுங்கி உயிரிழந்தனர்.

31 பேர் காயமடைந்தனர். இவர்களில் 21 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த 21 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகமருத்துவர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்த மற்றவர்கள் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையிலும், கோவைமருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+