மத்திய அமைச்சரவையில் பா.ம.கவுக்கு இடம் இல்லை
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துஉள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடனடியாக மத்திய.அமைசகரவையில் இடம்கொடுக்கப்படாது என தெரிய வந்துள்ளது.
மீண்டும் தேசிய ஜனநயாக கூட்டணியில் இணை விருப்பம் தெரிவித்தது.பா.ம.க.தலைவர் ராமதாஸ் இது தொடர்பாக தே.ஜ.கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்ஜார்ஜ் பெர்னாண்டசையும், பிரதமர் வாஜ்பாயையும் சந்தித்து பேசினார்.
தே.ஜ. கூட்டணியில் பா.ம.க. சேர்க்கப்பட்டாலும் கூட அந்த கட்சியினருக்குஉடனடியாக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட மாட்டாது என்று பா.ஜ.க.தெரிவித்துள்ளது.
இது குறித்து பா.ஜ.கவினர் கூறுகையில், பா.ம.கவுக்கு உடனடியாக மத்தியஅமைச்சரவையில் இடம் அளிக்கப்பட மாட்டாது. அவர்கள் பொறுத்திருந்துதான் ஆகவேண்டும் என்றனர்.
மூத்த பா.ஜ.க.தலைவரும் மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு கூறுகையில்,பா.ம.க. இன்னமும் கூட்டணியில் அனுமதிக்கப்படவில்லை. தே.ஜ. கூட்டணியில்பா.ம.க. இணைந்துள்ளது என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினாலும் தமிழகத்தில்தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது குறித்தமுடிவை தி.மு.க.தலைவர் கருணாநிதிதான் எடுக்க வேண்டும் என்றார்.
தி.மு.க.தலைவர் கருணாநிதியும் ராமதாஸ் முதலில் என்னை வந்து சந்தித்து பேசட்டும்.அதன் பின் பா.ம.கவை தே.ஜ.கூட்டணியில் இணைப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்என்று கூறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் புதிய தமிழகம்கட்சியினர் புதிய நிபந்தனை ஒன்றை பா.ம.கவுக்கு விதித்துள்ளனர்..
பா.ம.க. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்றால்அவர்கள் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுவென்ற 20 பா.ம.க.எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்என்று கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications