ஆடிப் பெருக்கெடுக்காத ஆறு... 50 பைசாவுக்கு தண்ணீர் வாங்கி பூஜை
கோவை:
நொய்யல் ஆறு வறண்டுபோய் கிடப்பதால், ஆடிப் பெருக்கு விழா கொண்டாட வந்த பக்தர்கள் 50 பைசாவுக்குஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி பூஜை செய்தனர்.
ஆனால், இப்போது ஆறுகளில் மணல் கூட இல்லை (அதையும் கரை வேட்டிகளின் உதவியுடன் திருட்டு மணல்லாரிகள் அள்ளிச் சென்றுவிடுகின்றன). ஆறு என்ற பெயரில் ஒரு ஓரத்தில் சாக்கடை நீர் தான் ஓடுகிறது.
காவிரி, அதன் கிளை நதிகளில் ஆடிப் பெருக்கு மிக விமர்சையாகக் கொண்டாடப்படும். கோவையில் நொய்யல்ஆற்றிலும் இந்த விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆற்றின் கரையில் உள்ள பட்டீஸ்வரர்கோவிலில் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டு இந்த விழாவையொட்டி சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இனால்,சிறுவாணி அணையிலும் இப்போது போதிய தண்ணீர் இல்லை. இதனால், தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
இந்த ஆற்றின் கரையில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலில் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை நொய்யல் ஆற்றில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. சிறுவாணி அணையில் தண்ணீ பூஜைசெய்யக் கூட தண்ணீர் இல்லை. நிலைமையை உணர்ந்து கொண்ட லோக்கல் வியாபாரிகள் சிலர் டிரம்களில்தண்ணீர் கொண்டு வந்து வைத்துக் கொண்டு டம்ளர் 50 பைசா என்று மினரல் வாட்டர் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தனர்.
ஒரு டம்ளர் 50 பைசா வீதம் 10 முதல் 15 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கித் தான் பக்தர்கள் பூஜைகள் செய்தனர்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications