6 மாதங்களில் 7 லட்சம் வழக்குகளை முடித்து தமிழகம் சாதனை
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த 6 மாத காலத்தில் 7 லட்சம் வழக்குகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றநீதிபதி என்.கே. ஜெயின் கூறி உள்ளார்.
கையேட்டை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கே.ஜெயின் வெளியிட்டார். நீதித்துறை சங்க சி.டியையும் அவர்வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது:
இந்த கையேடு தமிழ்நாட்டில் இப்போதுதான் முதல்முறை.ாக வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் அனைத்துநீதிபதிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இதை ஒரு சாதனை என்று கூறலாம்.
நீதிபதிகள் வழக்குகளை வேகமாக முடிக்க வேண்டும். பழைய வழக்குகளை நீண்ட நாட்கள் தேங்கவிடாமல்விரைவாக முடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 689 நீதிபதிகளில் 650 பேர், கடந்த ஆண்டு மட்டும் 13 லட்சத்து 40 ஆயிரத்து 998வழக்குகளை முடித்து உள்ளனர். இதில் 22,000 வழக்குகள் 7 வருடங்களுக்கு மேலாக நிலுவையில்இருந்தவையாகும்.
இந்த ஆண்டு, கடந்த 6 மாதங்களில் மட்டும் 6 லட்சத்து 96 ஆயிரத்து 896 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.இவற்றில் 10,000 வழக்குகள் 7 வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகளாகும்.
மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிபதி, போலீஸ் கமிஷனர் ஒத்துழைப்போடு சுமார் 10,000 வழக்குகைளமுடித்துள்ளார். இதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் 30 அதி விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்றங்களில் மாவட்டநீதிபதிகள் பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
பொதுமக்களுக்கு உதவும் விதமாக சட்ட உதவி மையங்கள் சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில்அமைக்கப்படும். இதில் சட்டக்கல்லூரி மாணவர்களும் பங்கேற்று பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications