போலீசாரிடம் குறை கேட்கிறார் ஜெ.
சென்னை:
போலீசாரின் குறைகளைத் தீர்க்கும் மனுக்களைப் பெறுஜதற்காக, 3 மாதங்களுக்கு ஒரு முறை நேரம் ஒதுக்கவுள்ளார்முதல்வர் ஜெயலலிதா. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள்மாநாட்டின் நிறைவு உரையின் போது முதல்வர் வெளிட்டார்.
போலீசாருக்குப் பயன் அளிக்கும் விதமாக அவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக, போலீஸ் துணைஇன்ஸ்பெக்டர் ஜெனரல்கள், சூப்பிரண்டுகள் மற்றும் மூத்த அதிகாரிகள் மாதத்திற்கு ஒரு நாள் இதில் தீவிர கவனம்செலுத்த வேண்டும்.
போலீசாரிடம் இருந்து குறைகளை தீர்க்க கோரும் மனுக்களைப் பெறுஜதற்காக, ஒவ்வொரு காலாண்டிலும்(3மாதங்கள்) ஒரு நாள் ஒதுக்கப்படும்.
அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளில் ஏற்படும காலி இடங்களைமுன் கூட்டியே கணக்கிட ஒரு முறை உருவாக்கப்படும்.
சீருடைகள் பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக ஆள் எடுக்கும் ஆண்டு திட்டம் அமுல்படுத்தப்படும். என்றுஜெயலலிதா பேசினார்.


Click it and Unblock the Notifications
