மீண்டும் சுதாகரனுக்கு இடைக்கால ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிவாஜிகணேசனின் அஸ்திகரைப்பு சடங்கில் கலந்து கொள்வதற்காக வி.என். சுதாகரன்3 நாள் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரன் கொலை மிரட்டல்வழக்கு போதை பொருள் வைத்திருந்த வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவர் நடிகர் சிவாஜிகணேசன் பேத்தி சத்தியலட்சுமியின் கணவர்.

சிவாஜி கணேசன் இறந்ததையடுத்து, அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காககடந்த மாதம் 24ம் தேதி சுதாகரனுக்கு நிபந்தனையுடன் கூடிய 3 நாள் இடைக்காலஜாமீன் வழங்கப்பட்டது.

அந்த ஜாமீன் காலம் முடிந்த பின்பு சுதாகரன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிவாஜிகணேசனின் அஸ்தி கரைப்பு சடங்கில் கலந்து கொள்ள சுதாகரனைஇடைக்கால ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று அவர் சார்பில் அவரது வழக்கறிஞர்சரவணகுமார் கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மலைசுப்ரமணியன் சுதாகரனுக்குசனிக்கிழமை முதல் 3 நாள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சுதாகரன் போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதிதமிழ்வாணனின் வீட்டில் சுதாகரன் ஆஜர்படுத்தப்பட்டார்.

சுதாகரன் 4 வழக்குகளுக்கும் தலா ரூ.50,000 வீதம் ரூ.2 லட்சத்துக்கான ஜாமீன்பத்திரத்தை செலுத்தினார். சுதாகரன் சார்பாக அவரது வக்கீல் சரவணகுமாரும், அரசுதரப்பில் ஷாஜகானும் ஆஜரானார்கள்.

ஜாமீன் தொகைக்கான பத்திரத்தை பெற்றுக்கொண்ட நீதிபதி தமிழ்வாணன், சுதாகரனை3 நாள் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

சுதாகரனுக்கு கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தாமஸ் பிரபாகரன் தலைமையிலான 2போலீசார் காவல் வழங்க வேண்டும் என்றும், சுதாகரன் இடைக்கால ஜாமீன் காலம்முடிந்ததும்7ம் தேதி காலை 10.30 மணி அளவில் மீண்டும் சுதாகரனை போதைப்பொருள் தடுப்பு குற்றவியல் தனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிதமிழ்வாணன் உத்தரவிட்டார்.

இடைக்கால ஜாமீனில் இருக்கும் காலத்தில் பத்திரிக்கையாளர்கள், அவரது நண்பர்கள்,அவரது மன்ற உறுப்பினர்களை சுதாகரன் சந்திக்க கூடாது. வீட்டு நிகழ்ச்சிகளை தவிரமற்ற நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளக்கூடாது என்று நிபந்தனையும்விதிக்கப்பட்டு உள்ளது.

இதை அடுத்து ஜாமீனில் விடுதலையான சுதாகரன் தன்னுடைய காரில் வீட்டுக்குபுறப்பட்டுச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+