விழுப்புரம் அருகே "இறந்தவர்" உயிருடன் வந்தார்
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே தந்தை இறந்து விட்டதாக வந்த தந்தியை பார்த்து விட்டு இறுதி சடங்குக்கு சென்ற மகன்,அங்கே தந்தையை உயிருடன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இவருக்கு கடந்த 1ம் தேதி ஒரு தந்தி வந்தது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் சானிப்பூண்டியில் வசிக்கும்அவரது தந்தை இறந்து விட்டதாக கோவிநத்த சாமி ஆசாரியின் தம்பி பழனி தகவல் கொடுத்து இருந்தார்.
தந்தி வந்த உடன், தனது உறவினர், மாமனார், மாமியார் மற்றும் நண்பர்கள் 40 பேருடன் தனது தந்தை வசித்துவந்த சானிப்பூண்டி கிராமத்திற்கு சென்றார் கோவிந்தசாமி.
இரவு 10 மணிக்கு அங்கே சென்றவர், வீட்டு முன்பு "அப்பா" என்று அலறிக் கொண்டே வேனில் இருந்து தன்உறவினர்களுடன் இறங்கினார்.
ஆனால், வீட்டின் கதவைத் திறந்தவரே கோவிந்தசாமியின் அப்பா கண்ணன்தான். தந்தையைப் பார்த்ததும்கோவிந்தசாமி அதிர்ச்சி அடைந்தார்.
தந்தை கண்ணனுக்கும் ஒரே வியப்பு! மகனைப் பார்த்து, "ஏன் இவ்வளவு பேருடன் மாலையுடன் வந்திருக்கிறாய்"என்று மகனைப் பார்த்து கேட்டார். கோவிந்தசாமியோ "கோவிலுக்கு போகிறோம்" என்று கூறிவிட்டு திரும்பிவிட்டார்.
அங்கிருந்து நேராக பெங்களூருக்கு சென்று, அங்கு வசிக்கும் தன் தம்பியைச் சந்தித்து, "நீதானே அப்பா இறந்துவிட்டதாக தந்தி கொடுத்தாய்" என்று கேட்டார். ஆனால் அவரோ "இல்லவே இல்லை" என்று மறுத்தார்.
சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விசாரித்த போது கோவிந்தசாமி ஆசாரியுடன் முன் விரோதம் கொண்ட யாரோஒருவர்தான், இவருடைய தம்பியின் பெயரில் தந்தி கொடுத்து இருக்க வேண்டும் என்று தெரிய வந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications