மன நல காப்பகத்தின் உரிமையாளர் கைது
ஏர்வாடி:
25 மனநோயாளிகள் தீ விபத்தில் சிக்கி இறந்து போனதையடுத்து அந்தக் காப்பகத்தின் உரிமையாளர் உள்பட 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுஷா மன நோயாளிகள் மையம் என்ற இந்த காப்பகத்தின் உரிமையாளர் முகைதீன், அவரது தம்பி மனைவி உள்ளிட்ட 5 பேர்தீவிபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏர்வாடி தர்ஹா பகுதியில் மொத்தம் 14 மன நோயாளிகள் காப்பகங்கள் உள்ளன. அனைத்துமே தனியாருக்குச் சொந்தமானவை.இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டும், அடித்தும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று புகார்கொடுக்கப்பட்டது. அதையடுத்து சமீபத்தில் இந்த காப்பகங்களைக் கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
மேலும், இந்தக் காப்பகங்களில் உள்ள நோயாளிகளை இலவசமாக சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்குமாறு அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் இங்கு சிகிச்சை பெற்றால்தான் குணமடைவார்கள் என்று பொதுமக்கள்கருதுவதால் அவர்கள் இதைப் பொருட்படுத்துவதில்லை என்கிறார் மாவட்ட கலெக்டர் விஜய்குமார்.
முதல்வர் உதவி:
இதற்கிடையே, தீவிபத்தில் இறந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிதியும், பலத்த காயமடைந்தவர்களுக்குதலா ரூ. 15,000 நிதியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 6000 நிதியும் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இறந்தவர்கள் அனைவரும் மன நோயாளிகள் என்பது மனதைகாயப்படுத்தியுள்ளது. காயமடைந்த நோயாளிகள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
இதற்கிடையே ஏர்வாடிக்கு மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்வர் ராஜா விரைந்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications