இலங்கை: கொலையாளிக்கு உதவிய இந்திய தம்பதி கைது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்த இலங்கை சுங்க வரித்துறை அதிகாரிக்குபுகலிடம் கொடுத்து அவரை தப்ப வழி செய்த குற்றத்திற்காக இந்திய தொழிலதிபரும்அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் உதவி கஸ்டம்ஸ் கண்காணிப்பாளரான பணிபுரிந்து வந்தவர் சுஜித்பிரசன்னா பெரேரா. இவர் சமீபத்தில் மர்மமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

சொந்த விரோதம் காரணமாக அவரை அனுரா வீரவாஸ்னா என்ற இன்னொருகஸ்டம்ஸ் அதிகாரி தான் கொலை செய்தார் என இலங்கை போலீசார் நம்புகின்றனர்.அவரைத் தேடியும் வந்தனர்.

ஆனால், இவர் இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டார்.

இவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், இந்தியாவுக்குத் தப்பிச் செல்லஉதவியதாகவும் இலங்கையில் வசித்து வரும் இந்திய தொழிலதிபர் ஒருவரையும்,அவரது மனைவியையும் இலங்கை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகயிைல், அனுரா வீரவாஸ்னாவிற்கு அடைக்கலம்கொடுத்ததையும், அவர் இந்தியா தப்பி செல்வதற்கு உதவியதையும் இந்தியத்தொழிலதிபரும் அவரது மனைவியும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

தொழிலதிபரின் மனைவி அனுராவுடன் இந்தியா வரை சென்று, அனுராவை தனதுநண்பர் ஒருவர் வீட்டில் தங்க வைத்ததையும், அனுரா இந்தியா செல்வதற்கு விசாவாங்கிக் கொடுத்ததையும் ஒப்புக் கொண்டனர் என்று கூறினர்.

இந்தியா வந்த அனுரா பாதுகாப்பாக ஒரு மருத்துவமனையில் தங்கிக் கொண்டார்.

தன்னைக் காப்பாற்றிய தம்பதி போலீசிடம் சிக்கிவிட்டதால், மருத்துவமனையில் உள்ளதன்னை இந்திய போலீஸ் உதவியுடன் இலங்கை போலீசார் கைது செய்துவிடுவார்கள்என்ற பயந்த வீரவாஸ்னா தற்கொலை செய்து கொள்ள மருத்துவமனையின் மாடியில்இருந்து குதித்துள்ளார்.

ஆனால், வெறும் கால் எலும்பு முறிவுடன் தப்பிவிட்டார். இப்போது அதேமருத்துவமனையில் எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார் வீரவஸ்னா.

இந் நிலையில், வீரவஸ்னாவுக்கு உதவிய இந்திய தம்பதி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+