ஏர்வாடியில் தீ விபத்து: மனநிலை பாதிக்கப்பட்ட 25 பேர் கருகி சாவு- 11 பேர் பெண்கள்
ஏர்வாடி:
ஏர்வாடியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகத்தில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், 11பெண்கள் உள்பட 25 பேர் கருகி இறந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஏராளமான மன நலக் காப்பகங்கள் உள்ளன. இங்கு மன நலம்பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு இந்தக் காப்பகத்தில், பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீ குபுகுபுவென காப்பகம்முழுவதும் பரவியது. சிறிய இல்லமாக அந்தக் காப்பகம் இருந்ததால் தப்பி வரவும் வழியில்லை.
மேலும், மன நோயாளிகளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்பதால் 25-க்கும் மேற்பட்டோர் கருகிஇறந்தனர். ஆனால் சாவு எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று தெரிகிறது.
தீவிபத்து குறித்து அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. உள்ளே சிக்கி இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.சில பிணங்கள் அடையாளமே காண முடியாத அளவுக்கு கருகி விட்டன.
இறந்தவர்களில் 11 பேர் பெண்கள். மேலும் 5 பேர் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப்போராடி வருகின்றனர். சிறு தீக்காயங்களுடன் தப்பிய மேலும் பல பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தீ விபத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து, போலீசார் விசாரித்துவருகின்றனர். மன நலக் காப்பகத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
இந்த மன நலக் காப்பகங்களில் பாதுகாப்பான சூழ்நிலை இல்லை என்று அவ்வப்போது புகார் கூறப்படுவது உண்டு.ஆனால், அதுகுறித்து அரசுத் தரப்பில் கண்டு கொள்ளப்பட்டதே இல்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இதே மாதிரியான தீ விபத்து இந்த இடத்தில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தப்பிக்கக் கூடத் தெரியாமல், அந்த மன நலம் இல்லாத உயிர்கள் தீயில் சிக்கி கருகி இறந்து போயியுள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications