மதுரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் பலி: 82 பேர் காயம்
மதுரை:
மதுரை அருகே உள்ள கோவில் திருவிழாவை ஒட்டி நடந்த ஜல்லிக்கட்டு என்றுஅழைக்கப்படும் காளை மாடுகளை பிடிக்கும் வீர விளையாட்டின் போது மாடு முட்டிஒருவர் உயிரிழந்தார். 82 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டில் முரட்டுக் காளை மாடுகள் பல ஊர்களிலிருந்தும் அழைத்துவரப்படும். சிலர் காளைகளை ஜல்லிக்கட்டுக்கென்றே வளர்த்துப் பழக்கப்படுத்துவதும்உண்டு.
காளைகள் மேள தாள சத்தங்களுக்கிடையே விளையாட்டுக்கென உள்ள மைதானத்தில்(கிரவுண்ட்) விரட்டி விடப்படும். மாட்டின் கழுத்தில் பணமுடிப்பு கட்டப்பட்டிருக்கும்.மாட்டை அடக்கி பிடிக்கும் இளைஞர்கள் அந்த பண முடிப்பை எடுத்துக் கொள்ளலாம்.சில சமயம் மாட்டின் கழுத்தில் பண முடிப்புடன் தங்கச் சங்கிலியும் கட்டப்பட்டிருக்கும்.
மாட்டை கோபப்படுத்தவதற்கென்று தாரை, தப்பட்டைகள் முழக்கப்படும். வாத்தியஓசைகளை கேட்டு காளைகள் மூர்க்கமாக ஓடத் துவங்கும். சிலர் மாடுகளுக்கு சாராயம்ஊத்தி விடுவதும் உண்டு.
காளையை அடக்குவதெற்கென்று பல இளைஞர்கள் போட்டி போடுவர். இந்த வீரவிளையாட்டின் போது காளைகள் முட்டி பலர் படுகாயமடைவதும், சிலர் இறப்பதும்சகஜமானது.
பாண்டி கோயில்:
மதுரைக்கு அருகே உள்ள மேலமடையில் இருக்கும் பாண்டி கோவில் திருவிழாவைஒட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
இதில் மாடுகளை அடக்க சென்ற இளைஞர்கள் பலருக்கும் மாட்டின் கொம்பு குத்தியும்,கால்களால் மிதிபட்டும் காயம் ஏற்பட்டது. இதில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். இவர்களில் 32 வயதான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல்ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து போனார்.
காயமடைந்த மேலும் 82 பேரும் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications