மோசடி ஏலச் சீட்டு பெண் தற்கொலை: பணம் போட்டவர்கள் கதறல்
சென்னை:
சென்னையில் போலி நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்து, விஷம் குடித்த நிலையில் சென்னைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் இறந்தார்.
சென்னை ஏழுகிணறு பகுதியில் பல பெண்களிடம் ஏலச் சீட்டு என்ற பெயரில் பணம் வசூலித்து வந்த சுலோச்சனாஎன்ற பெண் ரூ.3 கோடி அளவுக்குப் பணம் சேர்ந்ததும் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்தபெண்கள் போலீஸில் புகார் கொடுத்தனர்.
தலைமறைவாகி விட்ட சுலோச்சனாவைப் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பதி அருகே விஷம் குடித்தநிலையில் போலீஸாரால் சமீபத்தில் சுலோச்சனா மீட்கப்பட்டார். அவரை சென்னையிலுள்ள தனியார்மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை இரவு சுலோச்சனா இறந்தார்.
சுலோச்சனா இறந்த தகவலை கேட்டவுடன், பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குதிங்கள்கிழமை கதறியபடி வந்தனர். சுலோச்சனா இறப்புக்காக அவர்கள் அழுது கொண்டு ஓடிவரவில்லை,
தங்களது பணம் திரும்பக் கிடைக்காதா என்று அந்த ஏழைப் பெண்கள் கதறிக் கொண்டிருந்த காட்சி பரிதாபமாகஇருந்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications