44 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பா.ம.கவுக்கு வரத் தயார்: ராமதாஸ்
தர்மபுரி:
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 44 பேர் அ.தி.மு.கவில் இருந்து விலகி பா.ம.கவில் சேரஇருக்கிறார்கள் என்று டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் பென்னாகரம் மற்றும் தர்மபுரியில்நடந்த கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை பென்னாகரம் வந்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்க அதிமுக திட்டமிட்டிருப்பதாக செய்திகள்வந்துள்ளன. இதற்கு 8 பா.ம.க. எம்.எல்.ஏக்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால்,அதிக விலை கேட்பதாகவும் கூறப்படுகிறது. ந்த பேரம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந் நிலையில் பா.ம.க. தலைவர் ராமதாஸ், தர்மபுரியில் நிருபர்களிடம் கூறுகையில்,
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, வரும் 14ம் தேதி ஓசூரில்இருந்து தொப்பூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தஉள்ளோம்.
ஒரு மனிதனுக்கு 40 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதன்படிகுடிநீர் வழங்கப்படுவதில்லை. எனவே இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கொண்டுஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வைப்போம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இணைந்துள்ளோமா ? இல்லையா? என்பதுகுறித்து கருணாநிதிதான் சொல்ல வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவது குறித்து கருணாநிதியை உரியநேரத்தில் சந்திப்பேன்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சியினர் தன்மானம் பாதிக்கப்பட்ட பின்புகூட்டணியை விட்டு வெளியே வருவார்கள்.
அ.தி.மு.க. திராவிட இயக்கமே அல்ல. அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டுஏமாற்றுகிறார்கள்.
ஜெயலலிதா முதல்வராக இருக்க முடியுமா? முடியாதா? என்பது பற்றிய நீதிமன்ற தீர்ப்புவர இருக்கிறது. அதன் பின் அ.தி.மு.கவில் இருந்து விலகி 44 எம்.எல்.ஏக்கள்பாட்டாளி மக்கள் கட்சியில் சேர உள்ளனர்.
திருமாவளவனின் ஒரே நோக்கம் வன்னியர்களை எதிர்ப்பதுதான். அவர்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்லது எதுவும் செய்ய மாட்டார். எங்கேனும் தீண்டாமைகொடுமை நடந்தால் அதை களைய பா.ம.க. முன் வரும் என்றார் ராமதாஸ்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications