"புலிகளால்" சாய்பாபா உயிருக்கு ஆபத்து?
பெங்களூர்:
கொலை மிரட்டல் எதிரொலி காரணமாகவும், விடுதலைப்புலிகளால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவும்சாய்பாபாவுக்கும் அவருடைய ஆசிரமங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆனால், சாய்பாபாவைத் தரிசிக்க இலங்கைத் தமிழர்கள் யாரும் செல்லக்கூடாது என்று விடுதலைப்புலிகள்பிரசாரம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் சிங்கள ராணுவத்தினரால் அப்பாவித் தமிழர்கள்கொன்று குவிக்கப்படுவதை சாய்பாபா கண்டிக்காததே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சாய்பாபாவுக்கும், அவருடைய ஆசிரமத்திற்கும் விடுதலைப்புலிகளால் ஆபத்து ஏற்படலாம் என்றுஆந்திர புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. இதுதவிர, சாய்பாபாவுக்கு அடிக்கடிகொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
இந்த ஆசிரமம் தவிர, பெங்களூரில் ஒய்ட்பீல்டு என்னும் இடத்திலுள்ள மற்றொரு ஆசிரமத்திற்கும் போலீஸ்பாதுகாப்பை அதிகரிக்குமாறு, கர்நாடகப் புலனாய்வுத் துறையினருக்கு ஆந்திர மாநிலப் புலனாய்வுத் துறையினர்எச்சரிக்கையும் வேண்டுகோளும் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இங்கும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், புட்டபர்த்தியில் இருந்து, ஒயிட்பீல்டு ஆசிரமத்திற்கு சாய்பாபா வரும்போது, பலத்த போலீஸ் பாதுகாப்புஅளிக்கும் படியும் ஆந்திர போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆசிரம நிர்வாகிகள் மறுப்பு:
இந்நிலையில், விடுதலைப்புலிகளால் ஆசிரமத்திற்கும், சாய்பாபாவுக்கும் ஆபத்து ஏற்படும் என்று வந்த செய்தியைஆசிரம நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
"சாய்பாபா அமைதி, அகிம்சைக்காக பக்திமார்க்ணீத்தைக் கடைப்பிடிக்கிறார். அவர் குறிப்பிட்ட ஒரு சாராருக்குஆதரவு கொடுக்கிறார் என்பது தவறு. சாய்பாபா எல்லோருக்கும் பொதுவானவர்" என்று அவர்கள் கூறினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications