ஜெயலலிதாவின் டெல்லி பயணம் திடீர் ரத்து
சென்னை:
தனது டெல்லி பயணத்தை முதல்வர் ஜெயலலிதா திடீரென ரத்து செய்துவிட்டார்.
செவ்வாய்க்கிழமை காலை டெல்லி செல்வதாக இருந்த ஜெயலலிதா பின்னர் மாலையில் செல்வார் எனக்கூறப்பட்டது.
ஆனால், தனது டெல்லி பயணத்தை ஜெயலலிதா ரத்து செய்துவிட்டதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக இருந்து வரும் முதுகு வலி திடீரென அதிகரித்துவிட்டதாலும், நீண்ட தூரம் பயணம் செய்யமுடியாத நிலை உருவாகியிருப்பதாலும் தனது பயணத்தை ஜெயலலிதா ரத்து செய்துவிட்டதாக முதல்வர் அலுவலகம்தெரிவித்துள்ளது.
தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக விவாதிக்க திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி. பந்த்தைச்சந்திக்க ஜெயலலிதா டெல்லி செல்ல இருந்தார்.
இப்போது ஜெயலலிதாவுக்குப் பதில், நிதியமைச்சர் பொன்னையன் மற்றும் தலைமைச் செயலாளர் சங்கர் ஆகியோர்டெல்லி செல்வர்.
கருணாநிதி கைது விவகாரத்துக்குப் பின் ஜெயலலிதா மீது பெரும் கடுப்பில் இருக்கிறது மத்திய அரசு. டெல்லிக்குச்சென்றால், பிரதமரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக வேண்டும். ஆனால், கருணாநிதி கைது விவகாரத்தில்தொடர்புடைய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றல் விவகாரம், ராஜகோபாலனை மத்திய அரசுப் பணிக்குஅனுப்பாதது என வாஜ்பாய் அரசுடன் பனிப்போர் நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
இதனால், தான் இந்த நேரத்தில் டெல்லி செல்வதை ஜெயலலிதா தவிர்த்ததாகத் தெரிகிறது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications