தொழில் போட்டிதான் காரணம் என்கிறார் உரிமையாளர்
ஏர்வாடி:
தொழில் போட்டிகாரணமாக மர்ம கும்பல் தீவைத்திருக்கலாம் என்று மனநலக் காப்பகத்தின் உரிமையாளர்முகைதீன் பாதுஷா கூறியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலுள்ள மனநலக் காப்பகத்தில் நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை ஏற்பட்டதிடீர் தீ விபத்தில் கருகி 25 மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தனர். இன்னும் பலர் படுகாயத்துடன்உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்த மனநலக்காப்பகத்தின் உரிமையாளர் முகைதீன்பாதுஷா மற்றும் அவரதுகுடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்தது எப்படி என்று இன்னும் தெரியாத நிலையில், பாதுஷா மற்றும் அவரது குடும்பத்தினரிடம்போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் போது பாதுஷா போலீசாரிடம் தெரிவித்ததாவது:
அன்று அதிகாலை நாங்கள் அனைவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று அலறல்சத்தம் கேட்டது. இதையடுத்து நாங்கள் அனைவரும் திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது எங்கள் காப்பகத்தின்கீற்றுக் கொட்டகை தீப்பிடித்து மளமளவென்று எரிந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த பகுதி வழியாக சிலர் தப்பி ஓடுவதையும் நாங்கள் பார்த்தோம். ஆனால், அவர்கள் யார் என்றுஎங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. எங்கள் தொழிலில் பொறாமையும் போட்டியும் கொண்டவர்களின்வேலையாக இது இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்என்று பாதுஷா கூறினார்.
இந்தப் புகார் உண்மைதானா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications