ஹிரோஷிமா: அணுகுண்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ஹிரோஷிமா:
ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் பலியானவர்களுக்கு ஜப்பான் பிரதமர் ஜூனிசுரோ கொய்சுமி அஞ்சலிசெலுத்தினார்.
அந்த சோக நிகழ்ச்சியின் 56 -வது ஆண்டு நினைவு தினமான நேற்று (திங்கள்கிழமை) குண்டு வீச்சில்பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அணுகுண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு ஹிரோஷிமாவில் மட்டும் 2,21,893 பேர் இறந்தனர்.மேலும், குண்டு வீசப்பட்ட 55 ஆண்டுகளுக்குப் பிறகும், கடந்த ஆண்டு 4,000 -க்கும் மேற்பட்டோர் இறந்தார்கள்.அவர்கள் கடந்த ஆண்டுவரை கடும் வேதனையில் வாடிவந்தனர் என்பது தான் அனைவரது மனதையும் பாதிக்கும்செய்தி.
இந்த கோரச் சம்பவத்தில் உயிர்நீத்த அனைவருக்கும் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துவது ஜப்பானியர்களதுவழக்கம். மேலும் இந்த நாளை "ஹிரோஷிமா தினம்" என்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதே போல் இந்த ஆண்டும் ஹிரோஷிமா தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர்ஜூனிசுரோ கொய்சுமி, ஹிரோஷிமா மேயர் தடாதோஷி அகிபா மற்றும் நாகசாகி மேயர் இட்சோ இடோசூகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஜார்ஜ் புஷ் கொடும்பாவி எரிப்பு:
இந்தியாவின் கோல்கத்தா நகரில் "அனைத்திந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அமைப்பு" நடத்திய ஹிரோஷிமாதின அஞ்சலி நிகழ்ச்சியின் போது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் உருவ பொம்மை (கொடும்பாவி)எரிக்கப்பட்டது.
நாடு முழுவதிலும் இருந்து கோல்கத்தாவிற்கு வந்த அந்த இயக்கத்தைச் சேர்ந்த 100 பேர், அங்குள்ள அமெரிக்கமையத்தின் முன் கூடினர். அப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கோஷங்களையும் அவர்கள்எழுப்பினர். பின்னர் புஷ்ஷின் கொடும்பாவியை எரித்தனர்.
அதன் பிறகு, ஹிரோஷிமாவில் அணுகுண்டினால் இறந்தவர்களுக்கு அவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications