"முந்தைய திமுக அரசின் மெத்தனம்தான் காரணம்"
ஏர்வாடி:
ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்துக்கு கடந்த திமுக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்றுமுன்னாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் த.மா.கா எம்.எல்.ஏவுமான சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலுள்ள மனநலக் காப்பகத்தில் நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை 5 மணிக்குஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கருகி 26 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தது எப்படி என்று இன்னும் தெரியாதநிலையில் மனநலக் காப்பக உரிமையாளர் பாதுஷா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான முழு பொறுப்பும் முந்தைய திமுக அரசையே சாரும் என்றுபாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் பற்றிய செய்தியறிந்ததும், அவர் ஏர்வாடிக்கு விரைந்து சென்றுபாதிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஏர்வாடியில் தற்போது ஏற்பட்டிருப்பது மிகவும் துக்ககரமான சம்பவம் ஆகும். கடந்த ஆண்டு ஏர்வாடி மனநலக்காப்பகம் ஒன்றில் நோயாளிகளுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு 11 பேர் பலியானார்கள்.
அப்போது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த நான், "இங்கு மனநோயாளிகள் சங்கிலியால்கட்டப்பட்டிருக்கிறார்கள். மேலும் அறியாமல் அவர்கள் செய்யும் தவறுகளுக்காக அடித்து உதைக்கப்படுகிறார்கள்.இந்த காப்பகங்களில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. எனவே இந்த மாதிரி கொடுமைப்படுத்தும்காப்பகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்" என்றேன்.
மேலும், ஏர்வாடிக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், தனிகிளை ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடம்கேட்டிருந்தேன்.
இவை எல்லாம் முன்பே நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த விபத்தே ஏற்பட்டிருக்காது. ஆனால், இவை எதையும்கடந்த திமுக அரசு செய்ய முன்வரவில்லை.
எனவே, இந்தக் கோரச் சம்பவத்திற்கு முந்தைய திமுக அரசே முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்று கூறினார்பாலகிருஷ்ணன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications