For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்முவில் இந்துக்களைக் கொன்ற தீவிரவாதி சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் என்ற இடத்தில் 17 இந்துக்களை நிற்கவைத்து சுட்டுக் கொன்ற சம்பவத்தில்தொடர்புடைய தீவிரவாதி உட்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஹிமாச்சல் பிரதேசம் - ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையிலுள்ள லிடர் என்றகிராமத்தில் தீவிரவாதிகள் கூடாரம் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். அப்போது நடந்த கடும் சண்டையில் ஒருதீவிரவாதி கொல்லப்பட்டான். அவன் பெயர் அபு குலாம்.

இவன்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷ்ட்வார் என்ற இடத்தில் 17 இந்துக்களை நிற்கவைத்து சுட்டுக்கொன்ற சம்பவத்தில் முக்கியப் பங்கு வகித்தவன். இவன் இது தவிர பல அப்பாவிப் பொதுமக்களைப்கொன்றுள்ளான் என்பது குறிப்படத் தக்கது. இவன் லஸ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தைச்சேர்ந்தவன்.

மேலும், இந்த இயக்கத்தின் தோடா மாவட்டத் தலைவனாகவும் இருந்தவன். அவனிடமிருந்து ஒரு ஏ.கே.47 ரகத்துப்பாக்கி மற்றும் சில முக்கியத் திட்டங்கள் அடங்கிய பேப்பர்கள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல, தாட்ரி என்ற இடத்தில் நடந்த சண்டையிலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதற்கிடையில், மதரீதியாக கலவரம் வெடிக்கும் அபாயமுள்ள பகுதிகளான கிஷ்ட்வார் மற்றுத் பதேர்வா ஆகியபகுதிகளில் 4-வது நாளாக இன்று (செவ்வாய்கிழமை) ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் , இதுவரை எந்தஅசம்பாவிதமும் நடக்கவில்லை என்று போலீசார் கூறினர்.

மேலும் தோடா மாவட்டத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் ஊர்வலம் நடத்தியதோடு, பாகிஸ்தான் கொடிகளைஎரித்ததாகவும், அந்நாட்டுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X