"மீன் குழம்பு நல்லாயில்லை": கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை
சென்னை:
மீன் குழம்பு நல்லாயில்லை என்று கணவர் திட்டியதால், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ஆர்.கே. நகரைச் சேர்ந்தவர்கள் முருகன்-சுசீலா தம்பதியினர். இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்திருமணம் செய்து கொண்டனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
நேற்று (திங்கள்கிழமை) இரவு, தன் கணவனுக்காக, மீன் குழம்பு சமைத்தார் சுசீலா (22).
ஆனால், வீட்டிற்கு வந்து சாப்பிட்ட முருகன், தான் விரும்பிய ருசி இந்த மீன் கறியில் இல்லை என்று கூறி,சுசீலாவைக் கடுமையாகத் திட்டியிருக்கிறார். சுசீலாவும், பதிலுக்குக் கத்த, சண்டை வலுத்தது.
இதையடுத்து, கோபத்தில் வீட்டை விட்டு வெளியே போய்விட்டார் முருகன். இதனால், மிகவும் வெறுத்துப் போனசுசீலா தன் உடலில் மண்ணெண்ணையைத் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
அவர் போட்ட அலறலில், அண்டை வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். உடனே சுசீலாவை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுசீலா இறந்து போனார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications