ஐ.பி.எஸ். விவகாரம்: ஜெவுக்கு புதுவை முதல்வர் ஆதரவு
பாண்டிச்சேரி:
ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு அழைத்த விஷயத்தில், தமிழக அரசுக்கு பாண்டிச்சேரி முதல்வர் சண்முகமும்ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், இணை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் துணை கமிஷனர்கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோரை மத்திய அமைச்சகப் பணியில் நியமித்து, தமிழக அரசுக்குக் கடிதம்அனுப்பியது மத்திய அரசு.
ஆனால், இந்த 3 அதிகாரிகளையும் தமிழக அரசு அனுப்ப மறுத்து, பதில் கடிதம் அனுப்பிவிட்டது. சூட்டோடுசூடாக, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
கடந்த வாரம், இந்தக் கடிதத்திற்கான முதல் பதில் கடிதம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிடமிருந்து மத்தியஅரசுக்குச் சென்றது. அக்கடிதத்தில், தமிழக முதல்வரின் நிலைதான், ராஜஸ்தான் மாநிலத்தின் நிலையும் என்று தமிழகஅரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் கெலாட்.
அந்த வகையில், தற்போது ஜெயலலிதாவுக்கு அடுத்த ஆதரவு கிடைத்துள்ளது. பாண்டிச்சேரி முதல்வர் சண்முகமும்,தமிழக அரசு செய்தது சரிதான் என்று கூறியிருக்கிறார்.
"மாநில அரசு விஷயத்தில், தேவை இல்லாமல் மத்திய அரசு மூக்கை நுழைக்கக் கூடாது. போலீஸ் அதிகாரிகளைக்கட்டாயம் அழைக்க வேண்டும் என்ற அவசியம் வந்தால், மாநில அரசுடன் கலந்தாலோசித்து விட்டு, அதற்குஅப்புறம் அழைக்க வேண்டியதுதானே?" என்று செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறினார் சண்முகம்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்த 2 முதல்வர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications