மாணவர் சேர்க்கை: நிகர்நிலைப் பல்கலைகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கோயமுத்தூர்:

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள (டீம்ட் யுனிவர்சிட்டீஸ்) மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களை அரசுதேர்வுசெய்து அனுப்பும் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


மேலும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டப்பிரிவு 3ன் படி எந்தக் கல்லூரியும் ஒற்றைச் சாளர முறையைவிட்டு விலகியிருக்க முடியாது.

நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றிருந்தாலும் மாநில அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் தேர்வு செய்துஅனுப்பும் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இது பற்றிய முழு விவரம் வருமாறு,

கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கொள்ள பல மாணவர்களை மாநில அரசுதேர்வு செய்தது. அவர்களிடம் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

அவ்வாறு தேர்வு செய்யயப்பட்ட மாணவர்கள் அந்தப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றனர். ஆனால் பல்கலைக்கழகநிர்வாகம், தங்களுக்கு மாநில அரசு இதுபற்றித் தகவல் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே எல்லா காலியிடங்களும்நிரப்பப்பட்டு விட்டன என்று கூறி அவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுத்தது.

இதையடுத்து அந்த மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும். 50 சதவீத இடங்களைத் தான்நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யமுடியும் (விற்க முடியும்). மீதி 50 சதவீத இடங்களை மாநில அரசுதேர்வு செய்து அனுப்பும் மாணவர்களைத் தான் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம்,கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் உட்பட பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உயர் நீதி மன்றத்தில்ஒரு மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கலிபுல்லா மற்றும் சண்முகம் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அரசின்உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது,

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தானாகவே பொதுத் தேர்வு நடத்தி அனைத்து மாணவர்களையும் சேர்த்துக்கொண்டதாகக் கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது. மேலும், அனைத்து சுயநிதிக் கல்லூரிகளும் ஒற்றைச் சாளரமுறையைத் தான் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதுபற்றிய வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது,அனைத்து இடங்களையும் நிரப்பிவிட்டதாகக் கூறுவது ஆச்சர்யமாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+