காலியாகின்றன மனநல காப்பகங்கள்
ஏர்வாடி:
ஏர்வாடியில் உள்ள 16 மனநலக் காப்பகங்களை உடனடியாக மூடும்படி, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்உத்தரவிட்டதை அடுத்து, அந்தக் காப்பகங்கள் அனைத்தும் காலியாகி வருகின்றன.
ஏர்வாடியில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த மனநோயாளிகளின் இறுதிச் சடங்குகள் செவ்வாய்கிழமை நடந்தன.இந்தச் சடங்குகளில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்வர்ராஜா மற்றும் மாவட்ட கலெக்டர் உட்படபலர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தீவிபத்து குறித்து செய்தியறிந்ததும் பல மனநோயாளிகளின் உறவினர்கள், இங்கு வந்து தங்கள் உறவினர்களைஅழைத்துச் சென்றுவிட்டனர். மேலும், அங்குள்ள 16 தனியார் காப்பகங்களில் இருக்கும் அனைத்துமனநோயாளிகளின் உறவினர்களுக்கும், தங்கள் உறவினரை வந்து அழைத்துச் செல்லும்படி தகவல்தரப்பட்டுள்ளது.
இதுவரை 100 மனநோயாளிகள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எஞ்சிய 550 மனநோயாளிகளும்,இன்னும் 2 நாட்களில் அழைத்துச் செல்லப் படுவார்கள் என்று நம்புகிறோம். ஓலை வேய்ந்தமனநலக்காப்பகங்களுக்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளது.
ஏர்வாடி தர்காவிற்கு தங்கள் நோயைத் தீர்க்க வருபவர்களின் நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படாதவாறு அரசு பலபுதிய திட்டங்களை தீட்டி அதை சீர்படுத்த முடிவெடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், இங்குள்ள 16 தனியார் மனநலக் காப்பகங்களையும் உடனடியாக மூடும்படி, ராமநாதபுரம் மாவட்டகலெக்டர் புதன்கிழமை காலை உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, அந்த 16 காப்பகங்களும் மூடப்பட்டுவருகின்றன.












Click it and Unblock the Notifications