சென்னை விமான நிலையத்தில் கமாண்டோக்கள் பாதுகாப்பு
சென்னை:
இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 38 கமாண்டோ வீரர்கள், சென்னை விமான நிலையத்தில்பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதே போலவே, மும்பை விமான நிலையத்திலும் 38 கமாண்டோ வீரர்கள் அதிரடியாக இறக்கப்பட்டுள்ளனர்.
சமீப காலங்களில், அடிக்கடி இந்த 2 விமான நிலையங்களுக்கும் சர்வதேச மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததன்எதிரொலிதான் இந்த கமாண்டோ பாதுகாப்பு என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் 24ம் தேதி, இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமானங்கள் விடுதலைப்புலிகளால்தாக்கி அழிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இலங்கைக்கு வந்த பல விமானங்கள் சென்னை விமானநிலையத்திற்கே திருப்பி விடப்பட்டன.
இந்த நிலையில், சென்னையில் இந்திய-திபெத் எல்லைப் போலீசின் கமாண்டோ படையினர் சென்னை விமானநிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அடுத்த வாரம் புதன்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, சில இஸ்லாமியத் தீவிரவாதஅமைப்புகள் இந்த 2 விமான நிலையங்களிலும் தாக்குதல் தொடுக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகவும், இங்குகமாண்டோ பாதுகாப்புப் படை போடப் பட்டிருக்கலாம் என்று நம்பபப் படுகிறது.
இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்பு கமாண்டோக்கள், தற்போதுதான் முதல் முறையாக விமான நிலையங்களில்பாதுகாப்புக்காகப் போடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, மாநிலப் போலீசாரும் மத்திய தொழில்துறைப் படையினரும்தான் விமான நிலையங்கள் மற்றும்துறைமுகங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், தற்போது இந்தப் பாதுகாப்பையும் தாண்டி, கமாண்டோ பாதுகாப்புப் படையினரை இந்த 2 விமானநிலையங்களில் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் காவல் காத்துக் கொண்டிருப்பவர்கள்தான் இந்த இந்திய-திபெத் எல்லைப்பாதுகாப்புப் போலீசார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications