மத்திய-மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
ஏர்வாடி மனநல காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 மனநோயாளிகளில் தீயில் எரிந்து பலியான சம்பவம்குறித்து அறிக்கை தருமாறு, தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மனநல காப்பக அதிகாரிகளுக்குநோட்டீல் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை ஏர்வாடியில் உள்ள ஒரு தனியார் மனநல காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்குஇருந்த 27 மனநோயாளிகள் தீயில் கருகி இறந்தனர். கால்களில் இரும்புச் சங்கிலி போட்டு கட்டப்பட்டுஇருந்ததால் அவர்களால் தீயில் இருந்து தப்பிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வெளியாகி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற பதிவாளர் பி.எம்.குப்தா குறிப்புஒன்றை உச்ச நீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த், நீதிபதிகள் கே.டி.தாமஸ், ஆர்.சி.லகோதி ,என். சந்சோஷ் ஹெக்டே மற்றும் எஸ்.என்.வரியவா ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச், குப்தாஅனுப்பியுள்ள குறிப்பை ரிட் மனுவாக விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தில், மனித உரிமைகள் தொடர்பாக பல முக்கிய கேள்விகள் எழுந்துள்ளதால், இது குறித்துஉண்மையான தகவல்களை அடுத்த 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்தியஅரசு மற்றும் சம்பந்தப்பட்ட மனநல காப்பகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப இந்த பெஞ்ச் உத்தரவிட்டது.
மேலும், இந்தப் பிரச்சனை தொடர்பாக தமிழக முதன்மை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர்கள் அளிக்கும்விளக்கம் வரும் 17ம் தேதிக்குள் பெஞ்சுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications