கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு சேதம்
சென்னை:
சென்னை வேளச்சேரியில் வீட்டில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதில் தீப்பிடித்து கேஸ் சிலிண்டர் வெடித்தது.இதில் அந்த வீடு கடுமையாகச் சேதமுற்றது.
சென்னை வேளச்சேரி வ.உ.சி. நகரில் வசிப்பவர் ஜேக்கப் செரியன். இவர் தனியார் டயர் கம்பெனியில்பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் திங்கள்கிழமை இரவு சமையல் முடிந்ததும் அனைவரும் தூங்கச்சென்றனர். கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை அப்போது சரியாக மூடாமல் விட்டு விட்டுள்ளனர்.
இரவு முழுவதும் கேஸ் கசிந்து வீடு முழுவதும் பரவியுள்ளது. வீட்டின் ஒரு அறையில் பிரிட்ஜ் உள்ளது. அந்தஅறைக்குள்ளும் கேஸ் பரவியது. இதனால் மின்சார பிளக் பாயிண்ட்டில் கேஸ் பரவியதால் தீப்பிடித்துக் கொண்டது.இதனால் வீட்டின் சமையறை முழுவதும் கருகியது. ஜன்னல்கள் வெளியே உடைத்துக் கொண்டு விழுந்தன.
வீட்டில் வெடிகுண்டு வெடித்து விட்டதாக அஞ்சிய செரியன் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி தப்பினர்.பக்கத்திலிருந்த ஒரு குடிசையும் தீக்கிரையானது. ஆனால் அதில் யாரும் அப்போது இல்லை.
இதையடுத்து, வெடிகுண்டு வெடித்ததாக போலீஸாருக்குத் தகவல் போனது.
போலீஸார் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் கேஸ் சிலிண்டர்வெடித்து விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications