வாஜ்பாய் நேரம் ஒதுக்காததால்தான் ஜெ. டெல்லி பயணம் ரத்து
சென்னை:
பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்க நேரம் ஒதுக்குவதில் பிரதமர் அலுவலகம் கடைசிநேரம் வரை இழுத்தடித்ததால்வெறுப்படைந்த முதல்வர் ஜெயலலிதா தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முதல்வருக்கு முதுகுவலி அதிகரித்துள்ளதால் டாக்டர்கள்ஆலோசனைப்படி டெல்லி பயணம் ரத்தானதாகக் கூறப்பட்டது.
இதனால், ஜெயலலிதா சார்பாக, தமிழக நிதியமைச்சர் பொன்னையனும், தலைமைச் செயலாளர் சங்கரும் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை டெல்லி சென்றனர். இவர்கள் இருவரும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்துதிட்டக்கமிஷன் துணைத்தலைவர் கே.சி.பந்துடன் பேச்சுநடத்துவார்கள்.
முன்னதாக, டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, சட்ட அமைச்சர் அருண் ஜெட்லிமற்றும் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த் ஆகியோருடன் ஜெயலலிதா பேச்சு நடத்ததிட்டமிட்டிருந்தார். இதன்மூலம், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிலவும் மோதலுக்கு முற்றுப்புள்ளிவைக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், கருணாநிதி கைது முதல் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் வரை பல விஷயங்களில் மத்திய அரசுக்குஜெயலலிதா டிமிக்கி கொடுத்து வருவதால் மத்திய அரசு கடுங்கோபத்தில் உள்ளது. மேலும், கருணாநிதி கைதுசெய்யப்பட்ட போது, வாஜ்பாய் ஜெயலலிதாவுடன் போனில் தொடர்புகொண்டு பேச முயன்றார். ஆனால்முடியவில்லை.
அப்போது, "முதல்வர் அலுவலகத்திற்கு பிரதமர் அலுவலகம் தொடர்பு கொள்ளவே இல்லை. நானே அவருடன்பேசவேண்டும் என்றுதான் இருந்தேன். தொடர்பு கொண்டிருந்தால் பேசியிருப்பேன்" என்று ஜெயலலிதாகூறியிருந்தார். இதையறிந்து, வாஜ்பாய் மேலும் கடுப்பானதாகச் சொல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா விஷயத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மத்திய அரசு கையாண்டு வருகிறது.இந்நிலையில், ஜெயலலிதா-வாஜ்பாய் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குவது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தை முதல்வர்அலுவலகம் தொடர்பு கொண்டது.
ஆனால், நேரத்தை ஒதுக்காமல் பிரதமர் அலுவலகம் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்தஜெயலலிதா, தனது பயணத்தை ரத்து செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், முதல்வருக்கு முதுகுவலி அதிகரித்த காரணத்தால், மருத்துவர்களின் பரிந்துரைப்படி, முதல்வரின் டெல்லிபயணம் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் அலுவலகத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications