திமுக பேரணிக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
சென்னையில் 12ம் தேதி திக சார்பில் நடக்கவுள்ள பேரணிக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கருணாநிதி கைதைக் கண்டித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 100 இடங்களில் திமுக சார்பில் கடந்ததிங்கள்கிழமை கண்டனப் பேரணிகள் நடந்தன. இந்நிலையில் 12ம் தேதி, சென்னையில் மாபெரும் பேரணிக்குதிமுக ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பேரணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஷேக் பரீத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவர் தன் மனுவில், பேரணி என்ற பெயரில் வன்முறையைத் தூண்ட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம்தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று கூறி அதிமுக ஆட்சியைக் கலைக்க அவர்கள்தீர்மானித்துள்ளனர். எனவே பேரணிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயசிம்மபாபு, நாகப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்புதன்கிழமை விசாரித்தது.
விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
யூகத்தின் அடிப்படையில் எந்த முடிவுக்கும் வரக் கூடாது. கலவரம் ஏற்படும் என்ற யூகத்தை அடிப்படையாகவைத்து பேரணிக்குத் தடை விதிக்க முடியாது.
ஜனநாயக அமைப்பில் இதுபோன்ற பேரணிகள் நடத்துவதில் தவறில்லை. எனவே திமுகவினர் நடத்தவுள்ளபேரணிக்குத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications