ஜம்மு ரயில் நிலையத்தில் 11 பயணிகள் சுட்டுக் கொலை
ஜம்மு:
காஷ்மீரில் ரயில் நிலையத்தில் புகுந்து தீவிரவாதிகள் திடீர் தாக்ககுதல் நடத்தியதில் 11 பயணிகள் பலியானார்கள். 30பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கும் இன்னும் பல தீவிரவாத அமைப்பினருக்கும் பாகிஸ்தான் உதவியும், தூண்டுதலும் அளித்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்த அமைப்பினைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் 3பேர் ரயில் நிலையத்திற்குள் புகுந்து, அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி திடீரென்று சரமாரியாகச் சுட்டனர்.
இதனால் பயணிகளும், ரயில் நிலையத்திற்கு பயனிகளை வழியனுப்ப வந்தவர்களும் மற்றும் வியாபாரிகளும்தலைதெறிக்க ஓடினர். இதனால் அந்த பிளாட்பாரம் முழுவதும் இரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது.
இந்தத் தாக்குதலில் 5 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்வழியில் இறந்தனர். இவர்கள் தவிர 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சற்று நேரத்தில் அங்கு வந்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் மீது சுட்டதில் ஒரு தீவிரவாதிகொல்லப்பட்டான். மற்ற 2 பேர் தப்பிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் பரூக் அப்துல்லா கடும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரித்துள்ளார்.மேலும், பாகிஸ்தான் வன்முறையைத் தூண்டிவிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications