ஈவ் டீசிங்... குமரி போலீஸார் சிறப்பு நடவடிக்கை
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இரண்டு சகோதரிகள் மீது வாலிபர் ஒருவர் ஆசிட் ஊற்றியசம்பவத்தையடுத்து, பெண்களை கேலி செய்வதைத் தடுக்க போலீஸார் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
தக்கலையில் தன்னை காதலிக்க மறுத்த சரிதா-சபீதா ஆகிய சகோதரிகள் மீது பைசல் என்ற வாலிபர் ஆசிட்ஊற்றினார். இதில் முகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தையே பரபரப்பிற்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, பெண்களைக் கேலிசெய்யும் நபர்களைப் பிடிக்க போலீஸார் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது:
பெண்களைக் கேலி செய்வதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இதன்படி பெண்களையாராவது கேலி செய்தால், அவர்களைப் பற்றி பொதுமக்கள் போலீஸாருக்கு போனில் உடனடியாகத் தகவல்கொடுக்கலாம். அவர்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
இதுதவிர, பெண்கள் பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் சாதாரண உடையில் பெண் மற்றும் ஆண்போலீஸார் நடமாடுவார்கள். சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் நபர்களைப் பிடித்து, இவர்கள்விசாரிப்பார்கள் என்றார் அவர்.
இதற்கிடையே சகோதரிகள் மீது ஆசிட் வீசிய பைசல் கைது செய்யப்பட்டு, நாகர்கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications